Heart Attack Symptoms in Women: சமீப காலங்களில் பலருக்கு மாரடைப்பும் இதய கோளாறுகளும் வருவதை காண்கிறோம். இதய ஆரோக்கியம் நம் அனைவருக்குமே மிக முக்கியம். இதயம் நின்றுவிட்டால் வாழ்வில் வேறு ஒன்றும் இல்லை. ஒருவருக்கு இதயத்தில் இரத்த ஓட்டம் குறைய ஆரம்பிக்கும் போது அல்லது இதயத்தின் இரத்த ஓட்டத்தில் தடைகள் ஏற்படும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரடைப்புக்கு கொலஸ்ட்ரால் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றது. கெட்ட கொழுப்பு குவிந்து கிடப்பதால் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக கருதப்படுகின்றது. இப்படி குவியும் கெட்ட கொழுப்பு, இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது, மாரடைப்பை ஏற்படுத்துகிறது.


அதிகரிக்கும் மாரடைப்பு 


சில காலமாக பலர் மாரடைப்பால் பாதிக்கப்படுவதை காண்கிறோம். இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மாரடைப்பால் பாதிக்கப்படுகிறார்கள். வீடு, குடும்பம், அலுவலகம் என பல வேலைகளை செய்யும் பெண்கள் பல விதமான இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் எதிர்கொள்கிறார்கள். பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.


பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் காணப்படும் 5 முக்கிய அறிகுறிகள்:


நெஞ்சு வலி


மார்பு வலி (Chest Pain) என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பொதுவான அறிகுறியாக உள்ளது. மாரடைப்பு வருவதற்கு முன், பெண்கள் இதயத்திற்கு அருகில் கனமான உணர்வு, பதற்றம், அழுத்தம் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்த நிலை மருத்துவ மொழியில் ஆஞ்சினா என்று அழைக்கப்படுகிறது. ஆஞ்சினா என்றால் மார்பு வலி, அழுத்தம் மற்றும் அசௌகரியம் என்று பொருள். இப்படிப்பட்ட உணர்வு இருந்தால், உடனடியாக மருத்துவரை காண்பது நல்லது.


மயக்கம்


மாரடைப்பு வருவதற்கு முன்பு பெண்களுக்கு மயக்கம் (Fainting) ஏற்படலாம். மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் ஆகியவற்றுடன், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உணர்வுகளும் பொதுவாக ஏற்படுவதுண்டு. எனினும், மயக்கம் வேறு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம், ஆனால் மார்பு வலியுடன் இது போன்ற உணர்வு ஏற்பட்டால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இந்த நிலையில் உடனடியாக மருத்துவரை காண்பது நல்லது.


சுவாசிப்பதில் சிரமம்


மார்பு வலியுடன் சுவாசிப்பதில் ஏதேனும் சிரமம் (Breathlessness) ஏற்பட்டால், அதுவும் மாரடைப்பின் அறிகுறி என புரிந்துகொள்ள வேண்டும். சுவாசிப்பதில் சிரமம் இருப்பது மாரடைப்பின் ஒரு தீவிர அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். 


மேலும் படிக்க | Uric Acid: எகிறும் யூரிக் அமிலத்தை விரட்டி அடிக்கும் சில மேஜிக் இலைகள்


பதற்றம்


பொதுவாக பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் முன் பதற்றம் (Restlessness), கவலை, கோவம் ஆகியவை ஏற்படுவதுண்டு. இவற்றின் காரணமாக பெண்களுக்கு மனதிலும் உடலிலும் சங்கடங்கள் ஏற்படுவதுண்டு. இவற்றுடன் வியர்வையும் வந்தால், உடனடியாக மருத்துவரை காண்பது நல்லது.


மனநிலையில் மாற்றம்


மருத்துவ மொழியில் இது எம்ப்டி ஹெட் என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகிறது. இதுவும் மாரடைப்பு வருவதற்கு முன்பு தோன்றும் ஒரு அறிகுறியாக உள்ளது. மாரடைப்பு வரும் முன் அவர்களின் மூளை சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறனை இழக்கத் தொடங்குகிறது. நாம் என்ன செய்கிறோம் என்பதே அவர்களுக்கு புரியாமல் போகிறது. 


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கீழே போடாதீர்கள்.. கறிவேப்பிலை சாப்பிட்டால் நடக்கும் 10 அதிசயம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ