சிறுநீரக கல் பிரச்சனைக்கு அருமருந்தாகும் எளிய வீட்டு வைத்தியங்கள்
Home Remedies For Kidney Stones: சிறுநீரகத்தின் செயல்பாடு உடலில் இருந்து கழிவு, நச்சுகளை அகற்றுவதாகும். இது தவிர சிறுநீரகம், சரியான நீரேற்றம், திரவங்கள் மற்றும் உடலில் உள்ள தாது அளவுகளை பராமரிக்கின்றது.
Home Remedies For Kidney Stones: மாறிவரும் அவசர வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால், பெரும்பாலான மக்கள் பல வித உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். சமீப காலங்களில் பெரும்பாலான மக்களை பாடாய் படுத்தி வரும் பிரச்சனைகளில் சிறுநீரக கல் பிரச்சனையும் ஒன்று. சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. சிறுநீரகம் நமது உடலின் முக்கியமான உறுப்பு. இது வயிற்றுக்கு பின்னால் உள்ளது.
சிறுநீரகத்தின் செயல்பாடு உடலில் இருந்து கழிவு, நச்சுகளை அகற்றுவதாகும். இது தவிர சிறுநீரகம், சரியான நீரேற்றம் மற்றும் பிற திரவங்கள் மற்றும் உடலில் உள்ள தாது அளவுகளையும் பராமரிக்கின்றது. சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் அவற்றை சரி செய்ய சில எளிய வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம். எனினும், மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தண்ணீர்
சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் அதிக தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். இது இயற்கையான முறையில் கற்களை உடலை விட்டு அகற்ற உதவும்.
எலுமிச்சை சாறு
தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு குடித்து வந்தால் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். இது சிறுநீரக கற்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
காஃபின் உட்கொள்ளலை கட்டுப்படுத்துங்கள்
அதிகப்படியான காஃபின் உட்கொள்ளல் கற்களின் அபாயத்தை அதிகரிக்கும். ஆகவே காபி, அல்லது கஃபைன் கொண்டு உருவாக்கப்படும் பொருட்களை உட்கொள்ள வேண்டாம். குறைந்தபட்சம் இவற்றை குறைப்பது நல்லது.
மேலும் படிக்க | HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை !
துளசி
துளசியில் பல மருத்துவ குணங்களுடன் பல இயற்கை எண்ணெய்களும் உள்ளன. இவை கற்களை உடைத்து சிறுநீரின் மூலம் உடலை விட்டு வெளியே அகற்றும். இதற்கு தினமும் 6-7 துளசி இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.
அன்னாசி
அன்னாசிப்பழம் (Pineappple) சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர இதில் உள்ள சத்துக்கள் கொலஸ்ட்ராலை குறைத்து சிறுநீரக கற்களை அகற்ற உதவுகின்றன.
பூசணி சாறு
சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு பூசணி சாறு நன்மை பயக்கும். இந்த சாறு எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைய ஆரம்பிக்கும். பூசணி சாறு உடலில் உள்ள நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றுவதில் மிக பயனுள்ளதாக இருக்கும்.
இஞ்சி
இஞ்சியில் (Ginger) அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை இயற்கையான டையூரிடிக் ஆக செயல்படுகின்றன. இவை சிறுநீர் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. மேலும் உடலை சுத்தப்படுத்தவும் இவை உதவுகின்றன. இது சிறுநீரக பாதிப்பை தடுக்க உதவுகிறது. மேலும் இது சிறுநீரக கற்கள் அபாயத்தையும் குறைக்கிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இனி மறந்து கூட ஃபிரிட்ஜில் இந்த உணவுகளை வச்சிடாதீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ