)
Warning Symptoms of Kidney Problems: நம் உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. அவை இரத்தத்தை சுத்தப்படுத்தும் பணிகளை செய்கின்றன. நமது உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் சிறுநீர் மூலம் சிறுநீரகம் வெளியேற்றுகிறது. சிறுநீரகங்கள் மிக முக்கியமான உறுப்புகளாக கருதப்படுகின்றன. சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டால், அவை படிப்படியாக வேலை செய்வதை நிறுத்திவிடும். ஆகையால், சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், முதலில் அதை சரி செய்ய வேண்டும். அதற்கு, சிறுநீரக பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது. சிறுநீரகங்கள் வேலை செய்வதை முற்றிலுமாக நிறுத்தினால், கழிவுப் பொருட்கள் மெதுவாக உடலின் பல்வேறு பகுதிகளில் விஷத்தை நிரப்பத் தொடங்கும். சிறுநீரகத்தில் பிரச்சனைகள் வருவதற்கு முன், நம் உடல் சில அறிகுறிகளை நமக்கு அளிக்கின்றான. ஆகையால், இவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். சிறுநீரகங்கள் பலவீனமடைந்தாலே நமது உடலில் பல வகையான அறிகுறிகள் தோன்றும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சிறுநீரகத்தில் பிரச்சனை இருந்தால், இந்த அறிகுறிகள் தோன்றும்:
கால்கள் மற்றும் கண்களில் வீக்கம்
உடலில் உள்ள உறுப்புகளின் சமநிலை குறையும் போது கால்கள், கண்கள் மற்றும் பிற உடல் பாகங்களில் வீக்கம் ஏற்படலாம். சிறுநீரகங்கள் பலவீனமடையும் போதும் இந்த அறிகுறிகள் தோன்றும்.
சிறுநீர் கழிப்பதில் மாற்றங்கள்
சிறுநீரின் அளவு மாற்றம், சிறுநீரின் நிறம் மாற்றும் மற்றும் கடுமையான வாசனை ஆகியவை சிறுநீரக பலவீனத்தின் அறிகுறிகளாகும். இவற்றை கவனித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இதயம் தொடர்பான பிரச்சனைகள்
விரைவான இதயத் துடிப்பு, டயாலிசிஸ் தேவை அல்லது தலைச்சுற்றல் போன்ற இதயப் பிரச்சனைகளும் சிறுநீரக பலவீனத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். இவற்றைக் கண்டால் உடனடி மருத்துவ உதவி தேவைப்படும்.
உயர் இரத்த அழுத்தம்
சிறுநீரக பலவீனம் உயர் இரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இதனால் உடலில் இன்னும் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சோர்வு மற்றும் பலவீனம்
அதிகப்படியான சோர்வு மற்றும் பலவீனம் போன்ற உணர்வு சிறுநீரக பலவீனத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். இவற்றை புறக்கணிப்பது ஆபத்தாகலாம்.
வயிற்று வலி
சிறுநீரக செயல்பாடு குறைவதால் வயிற்று வலி மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
எடை அதிகரிப்பு
திடீரென எந்த காரணமும் இல்லாமல் எடை அதிகரித்தால், அது சிறுநீரக பலவீனத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம். காரணம் இல்லாமல் எடை அதிகரித்து, உங்கள் சிறுநீரகம் பலவீனமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது நல்லது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ