Foods & Habits to Increase HDL Cholesterol: கொலஸ்ட்ரால் என்பது ஒரு வாழ்க்கை முறை நோயாகும். கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும். நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால். எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆனால் HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் இதயம் மற்றும் பிற உறுப்புகளை கெட்ட கொழுப்பின் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, இதய ஆரோக்கிய பாதிப்பு, கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது, முதியவர்களை விட இளைஞர்களை அதிகம் குறி வைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணம். நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
உடலில் LDL கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகும் போதும் HDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும் போதும், மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது. இதய நரம்புகளில் கொலஸ்ட்ரால் சேர்ந்து, இதயத்திற்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, மாரடைப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், நல்ல கொல்ஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க நாம் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
1. தண்ணீர்
நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீரிழப்பு இருந்தால், எல்டிஎல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. நீரிழப்பு காரணமாக, கல்லீரல் அதிக கொலஸ்ட்ராலை இரத்தத்தில் வெளியிடுகிறது. மேலும், இரத்தத்தில் இருந்து கொழுப்பை பிரித்து அகற்றும் உடலின் திறன் பலவீனமடைகிறது. எனவே நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.
2. கிரீன் டீ
கிரீன் டீயில் கேட்டசின்கள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்ற கலவைகள் உள்ளன. இது எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது உடலின், வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது.
3. மஞ்சள்
குர்குமின் நிறைந்த மஞ்சள் கொழுப்பைக் குறைப்பதிலும், இருதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கிறது. எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள் கலந்த பாலை தினமும் குடிப்பதால், கொல்ஸ்ட்ரால் மட்டுமல்லாது கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படும் அபாயமும் குறைகிறது.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... சுவையான ‘சில’ இரவு உணவு ரெஸிபிகள்!
4. உடற்பயிற்சி
தினமும் 20 நிமிடம் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். கார்டியோ மற்றும் ஏரோபிக் பயிற்சிகள் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். எனினும், உங்களால் முடிந்த எளிய பயிற்சிகளை செய்தாலே போதுமானது.
5. நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க நார்சத்து நிறைந்த உணவுகள் உதவும். ராஜ்மா என்னும் சிறுநீரக பீன்ஸ், ஆப்பிள் மற்றும் பேரிக்காய் போன்ற உணவுகளில் கரையக்கூடிய நார்ச்சத்து காணப்படுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து இரத்த ஓட்டத்தில் கொழுப்பை உறிஞ்சப்படுவதைக் குறைக்கும். ஒரு நாளைக்கு 5 முதல் 10 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்து LDL கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | என்ன செஞ்சாலும் வெயிட் குறையலையா... ‘இந்த’ வெள்ளை உணவுகளை ஒதுக்கினாலே போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ