Hemoglobin Deficiency: நம்மில் பலருக்கு அடிக்கடி சோர்வு, பலவீனம், பசியின்மை ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பலமுறை ஹீமோகுளோபின் குறைபாட்டை மருத்துவர்கள் இதற்கு காரணமாக கூறுகிறார்கள். ஹீமோகுளோபின் என்றால் என்ன? ஹீமோகுளோபின் நமது உடலில் இருக்கும் ஒரு முக்கியமான புரதமாகும். இது நுரையீரலில் இருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹீமோகுளோபின் குறைபாடு


உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை (Anemia) என்ற நோய் ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் குறைபாடு, அதிக இரத்தப்போக்கு போன்ற பல காரணங்களாலும் இரத்த சோகை ஏற்படலாம். ஹீமோகுளோபின் உடலின் சீரான இயக்கத்திற்கு இன்றியமையாததாக கருதப்படுகின்றது. ஹீமோகுளோபின் குறைபாட்டிற்கான முக்கிய காரணங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.


ஹீமோகுளோபின் குறைபாட்டின் முக்கிய காரணங்கள்


இரும்புச்சத்து குறைபாடு: ஹீமோகுளோபினின் முக்கிய கூறு இரும்புச்சத்து. இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால், உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தி குறைகிறது. இது இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.


வைட்டமின் குறைபாடு: வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஹீமோகுளோபின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வைட்டமின்களின் குறைபாடு ஹீமோகுளோபின் குறைபாட்டை ஏற்படுத்தி இரத்த சோகையையும் ஏற்படுத்தும்.


அதிகப்படியான இரத்தப்போக்கு: மாதவிடாய், அறுவை சிகிச்சை ஆகிய நேரங்களிலோ அல்லது ஏதாவது காயங்கள் காரணமாகவோ அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது ஹீமோகுளோபின் குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம்.


நாள்பட்ட நோய்கள்: சிறுநீரக நோய், புற்றுநோய் மற்றும் சில நாள்பட்ட நோய்களும் ஹீமோகுளோபின் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன. 


மேலும் படிக்க | Osteoporosis: 40+ வயதாகிவிட்டதா... மூட்டு வலி ஏற்படாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை...!!


தவறான உணவுகள்: இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பதும் ஹீமோகுளோபின் குறைபாட்டை ஏற்படுத்தும்.


ஹீமோகுளோபின் குறைபாட்டின் அறிகுறிகள்


- சோர்வு
- பலவீனம்
- மயக்கம்
- மூச்சு திணறல்
- மஞ்சள் நிற தோல்
- தலைவலி
- இதயத்தில் படபடப்பு


ஹீமோகுளோபின் குறைபாட்டை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?


- ஹீமோகுளோபின் குறைபாட்டை தவிர்க்க, இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது மிக அவசியமாகும். பசலைக்கீரை, பீட்ரூட், அத்திப்பழம், பருப்பு வகைகள், இறைச்சி, கோழி போன்றவற்றில் அதிக இரும்புச்சத்து இருப்பதால், இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. 


- வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். முட்டை, பால், தயிர், பச்சை இலைக் காய்கறிகள், ஆரஞ்சு போன்றவற்றில் வட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றை அதிக அளவில் உட்கொள்வது நல்லது. 


- ஹீமோகுளோபின் குறைபாட்டுக்கான அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதாக உங்களுக்கு தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுகி, தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வது மிக அவசியம். 


பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.


மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை அடக்க, மூட்டு வலியை முடக்க உதவும் பச்சை இலைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ