Fruits to Cure Hemoglobin Deficiency: நமது உடலில் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதில் ஹீமோகுளோபின் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் குறைபாடு சோர்வு, பலவீனம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
Fruits to Cure Hemoglobin Deficiency: ஆக்சிஜன் வழங்கலில் முக்கிய பங்கு வகிக்கும் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். ஹீமோகுளோபினை அதிகரிக்க சில பிரத்யேக பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்ய உதவும் சில ஆரோக்கியமான பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மாதுளையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது மட்டுமின்றி மாதுளையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இரும்புச்சத்து ஹீமோகுளோபினின் முக்கிய கூறாக உள்ளது. வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. ஆகையால் ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் மாதுளையை சாப்பிடுவது மிக நல்லது.
ஆப்பிள் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. தினமும் ஆப்பிள் உட்கொள்வது ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது வைட்டமின் சி -இன் நல்ல மூலமாக பார்க்கப்படுகின்றது. வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. ஆகையால் ஆரஞ்சு பழத்தை உட்கொள்வது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
திராட்சையில் இரும்புச்சத்துடன் தாமிரமும் உள்ளது. தாமிரமும் ஹீமோகுளோபின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு திராட்சை பழம் சாப்பிடவும் பரிந்துரைக்கப்படுகின்றது. திராட்சையில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இவற்றின் காரணமாக இது உடலில் ஒட்டுமொத்த ஆரொக்கியத்திற்கு உதவுகிறது.
கிவி பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது தவிர, கிவி பழத்தில் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகளும் உள்ளன. கிவி பழம் ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற பழமாக கருதப்படுகின்றது.
செர்ரியில் அதிக அளவில் இரும்புச்சத்தும் தாமிரமும் உள்ளன. இவை இரண்டும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. ஆகையால் ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் செர்ரி சாப்பிட்டால் சில நாட்களில் குறைபாடு நீங்கி ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
பிளம்சில் இரும்புச்சத்துடன், வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துகளும் உள்ளன. இவை அனைத்தும் ஹீமோகுளோபின் பற்றாக்குறையை அகற்ற உதவுகின்றன. ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு பிளம்ஸ் உதவும்.
ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் இந்த பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வதோடு, சமச்சீரான உணவையும் உட்கொள்வது மிகவும் முக்கியம். இது மட்டுமின்றி ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தால், மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெறுவது மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.