Osteoporosis: 40+ வயதாகிவிட்டதா... மூட்டு வலி ஏற்படாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை...!!

How To Prevent Joint Pain & Osteoporosis: இன்றைய காலகட்டத்தில் வயதானவர்கள் மட்டுமல்ல இளையவர்கள் கூட சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று, மூட்டு வலி. எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால், மூட்டு வலி பிரச்சனை ஏற்படாது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 6, 2024, 11:14 AM IST
  • எலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது என்பது இன்றியமையாததாகிறது. நோய்கள் வரும் முன் காப்பது எப்போதுமே சிறந்தது.
  • எலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கடைபிடிக்க வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம்.
  • ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
Osteoporosis: 40+ வயதாகிவிட்டதா... மூட்டு வலி ஏற்படாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை...!! title=

How To Prevent Joint Pain & Osteoporosis: இன்றைய காலகட்டத்தில் வயதானவர்கள் மட்டுமல்ல இளையவர்கள் கூட சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று, மூட்டு வலி. எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால், மூட்டு வலி பிரச்சனை ஏற்படாது. வயது ஏற ஏற எலும்புகள் படிப்படியாக அடர்த்தியை இழக்கின்றன. இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. இதனால் கடுமையான மூட்டு வலி உண்டாவதோடு, எலும்பு முறிவுகள் ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது. 

வரும் முன் காப்போம்

எனவே, எலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது என்பது இன்றியமையாததாகிறது. அதனால் 40+வயதில் இருந்தே, எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால், வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி பிரச்சனை ஏதும் இல்லாமல், ஆரோக்கியமாக இருக்கலாம். நோய்கள் வரும் முன் காப்பது எப்போதுமே சிறந்தது. இந்நிலையில், எலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கடைபிடிக்க வேண்டியவற்றை (Health Tips) அறிந்து கொள்ளலாம்.

ஆரோக்கியமான சமச்சீர் உணவை உண்ணுங்கள்

எலும்பின் அடர்த்தியை பராமரிப்பதற்கு பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் தேவை. எனவே, எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை உண்ண வேண்டும். நீங்கள் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்கள் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றிமையாத கால்சியம் சத்து

எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியைப் பாதுகாக்க கால்சியம் சத்து அவசிய, தினசரி தேவையை பொறுத்தவரை 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும், 70 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும் 1,200 மில்லிகிராம் கால்சியம் தேவை. பால், தயிர் மற்றும் சீஸ் என்னும் பாலாடைக்கட்டி ஆகியவை கால்சியம் சத்து நிறைந்தவை. பாதாம், கால்சியம் செறிவூட்டப்பட்ட தானியங்கள், பச்சை இலை காய்கறிகள் மற்றும் செறிவூட்டப்பட்ட தாவர பால் ஆகியவையும் கால்சியம் சத்து நிறைந்தவை.

மேலும் படிக்க | முகத்தில் தோன்றும் ‘இந்த‘ மாரடைப்பு அறிகுறிகளை ஈஸியா எடுத்துக்காதீங்க.!

எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றிமையாத வைட்டமின் டி

எலும்பு ஆரோக்கியம் சிறப்பாக இருக்க பெரிதும் உதவும் கால்சியம் சத்து உடலில் உறிஞ்சப்பட வைட்டமின் டி சத்து அவசியம். சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி சத்தை பெறலாம். தினமும் ஒரு அரை மணி நேரமாவது சூரிய ஒளி உடலில் பட்டால் வைட்டமின் டி சத்து கிடைக்கும் . உணவைப் பொறுத்தவரை, முட்டையின் மஞ்சள் கருக்கள், செறிவூட்டப்பட்ட உணவுகள் மற்றும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் ஆகியவற்றில் வைட்டமின் டி நிறைந்துள்ளது.

எலும்புகளை வலுவாக்கும் உடற்யிற்சிகள்

ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது அவசியம். நடனம், ஜாகிங் மற்றும் நடைபயிற்சி போன்ற எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தி வலுவாக்கும். தினமும் இல்லை என்றாலும், வாரத்தின் 5 நாட்களுக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியில் ஈடுபட முயற்சிக்கவும்.

மது அருந்துதல், புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்

ஆல்கஹால் எலும்புகளில் உள்ள கால்சியம் சத்தை உறிஞ்சி, எலும்பு ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதே போன்று புகைபிடித்தல் எலும்பு அடத்தியை குறைக்கிறது. அதோடு, எலும்பு முறிவுகளின் சாத்தியத்தை அதிகரிக்கிறது. எனவே, மது அருந்துதல், புகைபிடித்தல் ஆகியவற்றை கைவிட்டால், எலும்புகள் ஆரோக்கியம் மட்டுமின்றி, ஒட்டு மொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ்... உச்சி முதல் பாதம் வரை நன்மைகள் ஏராளம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News