Health Tips: உடலை வலுவாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்க எலும்புகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. எலும்புகள்தான் உடலின் உண்மையான கட்டமைப்பாகும். இவை உடலின் வலிமையை அதிகரிக்கின்றன. ஆனால் எலும்புகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை மட்டுமே வலுவாக இருக்கும். வயது ஏற ஏற, எலும்புகள் தேய்ந்து பலவீனமடையத் தொடங்கும். அதுவும் இன்றைய ஓட்டம் நிறைந்த வாழ்க்கை முறையில் வயதுக்கு முன்பே எலும்புகள் வலுவிழந்து தேய்ந்து போகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தகைய சூழ்நிலையில், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சனைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. தவறான வாழ்க்கை முறை, சமநிலையற்ற உணவுப்பழக்கம் மற்றும் உடல் செயல்பாடுகள் குறைவதால், தற்போது 35 வயதிற்குட்பட்டவர்களில் எலும்பு பலவீனம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அதிகமாவது காணப்படுகின்றது. எலும்புகள் ஏன் பலவீனமடைகின்றன? அவை பலவீனமடைவதற்கான அறிகுறிகள் என்ன? எலும்புகளை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? இவை அனைத்தை பற்றியும் இந்த பதிவில் காணலாம். 
 
எலும்புகள் ஏன் பலவீனமடைகின்றன (Reasons for Weak Bones)


தவறான வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்றவைதான் எலும்புகள் வலுவிழப்பதற்கு முக்கியக் காரணங்களாக மாறிவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுவயதிலேயே ஏற்படும் காயங்கள், சறுக்கல்கள், ரத்தம் மற்றும் கால்சியம் பற்றாக்குறை, சூரிய வெளிச்சம் குறைவாக இருப்பது மற்றும் தவறான உணவுப்பழக்கம் போன்றவற்றால் எலும்புகள் பலவீனமடைகின்றன. இந்த நிலையில், எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி நீடிக்கிறது மற்றும் நடைப்பயிற்சி மற்றும் இயக்கத்தில் சிரமம் உண்டாகிறது. 


எலும்புகள் பலவீனமடைவதால் (Weak Bones), உயரம் குறைவாகத் தோன்றும். உண்மையில், முதுகெலும்பின் எலும்புகள் சுருங்கத் தொடங்கும் போது இது நிகழ்கிறது. முதுகெலும்பின் மேல் பகுதியில் ஒரு கூம்பு உருவாகிறது. பல நேரங்களில் பலவீனமான எலும்புகள் உடையக்கூடியதாக மாறத் தொடங்குகின்றன. இது மீண்டும் மீண்டும் உடையும் அபாயத்தை அதிகரிக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில், உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைவாக இருப்பதால் எலும்புகளும் பலவீனமடையத் தொடங்கும்.
 
மேலும் படிக்க | கல்லீரல் சூடானால் இந்த அறிகுறிகள் தோன்றும்... உஷார் மக்களே!!


எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள் (Ways To Improve Bone Health)


எலும்புகள் (Bones) சிறு வயதிலெயே பலவீனமடைவதைத் தடுக்க விரும்பினால், பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். கால்சியம் (Calcium) நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். 20 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் தினசரி உணவில் 1000 கிராம் கால்சியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்கள் தினமும் 1200 கிராம் கால்சியம் உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். 


கால்சியம் நிறைந்த உணவில் பால், தயிர், மோர் மற்றும் சீஸ் ஆகியவை அடங்கும். இது தவிர, சோயாபீன், ப்ரோக்கோலி, டோஃபு மற்றும் அத்திப்பழங்களும் கால்சியத்தின் நல்ல ஆதாரங்கள். இது தவிர, வைட்டமின் டி குறைபாட்டைப் போக்க நம் உடலுக்கு போதுமான சூரிய ஒளி கிடைப்பதும் மிக அவசியம். இதற்காக, தினமும் சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவிட வேண்டும். பால் மற்றும் தயிருடன் காளான்கள், பருப்பு வகைகள், முட்டை, மீன் போன்றவற்றையும் உட்கொள்ளலாம். உங்கள் உணவில் பச்சை இலைக் காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் எலும்புகளை வலுப்படுத்தலாம். சமச்சீரான உணவு எலும்பு ஆரோக்கியத்திற்கு (Bone Health) மிக அவசியம். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Food Toxins: உணவே நச்சாக மாறினால்? ஆரோக்கியமான பொருளாக இருந்தாலும் கவனம் தேவை...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ