Side Effects of Eggs: நம்மில் பலருக்கு நமது அன்றாட உணவில் முட்டை ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. மக்கள் இதை பெரும்பாலும் காலை உணவில் உட்கொள்கிறார்கள். முட்டைகளின் நன்மைகள் பற்றி நம்மில் பலகருக்குத் தெரியும். இது ஆரோக்கியமான காலை உணவாக பார்கப்படுகின்றது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கும் உணவுகளில் இதுவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முட்டை புரதத்தின் நல்ல மூலமாக பார்க்கப்படுகின்றது. இதை ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் விரும்பி உட்கொள்கிறார்கள். எனினும், எதையுமே அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் நல்லதல்ல. முட்டையும் அதற்கு விதிவிலக்கல்ல.


கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு முட்டைகள் அவ்வளவு நன்மை பயக்காது என்பது பலருக்குத் தெரியாது. எண்ணெய் அதிகம் உள்ள, வறுத்த அல்லது வெளிப்புற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் பெரும்பாலும் அதிகரிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் முட்டை சாப்பிடுவதும் கெட்ட கொழுப்பை அதிகரிப்பதாக நாட்டின் பிரபலமான இதய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.


முட்டைக்கும் கொலஸ்ட்ராலுக்கும் உள்ள தொடர்பு என்ன?


ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையால் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. இந்த வகை கொலஸ்ட்ரால் இதய நோயை ஏற்படுத்துகிறது. முட்டைகளுக்கும் கொழுப்பிற்கும் உள்ள தொடர்பைப் பொறுத்தவரை, முட்டைகளிலும் கொழுப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மக்கள் நல்ல கொழுப்பாக கருதும் முட்டையின் மஞ்சள் பகுதி, உண்மையில் மோசமான கொழுப்பாகக் கருதப்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். முட்டையின் மஞ்சள் பகுதி கெட்ட கொழுப்பின் மிகப்பெரிய மூலமாக உள்ளது.


மேலும் படிக்க | விமான நிலையம் அருகில் வசிப்பவரா... ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கூறும் அதிர்ச்சித் தகவல்


முட்டைகளின் ஆரோக்கிய நன்மைகள்


- முட்டை சாப்பிடுவது கொழுப்பிற்கு நல்லதல்ல என்றாலும், முட்டையின் வெள்ளை பகுதியை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். 
- முட்டையின் வெள்ளைக்கரு புரதச்சத்தின் சிறந்த மூலமாக உள்ளது.
- தினமும் முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட்டால், உடலுக்கு போதுமான புரதம் கிடைக்கும். 
- முட்டையில் எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும் வைட்டமின் டி -யும் உள்ளது.


கொலஸ்ட்ரால் நோயாளிகள் தவிர வேறு யாரெல்லாம் முட்டை சாப்பிடக்கூடாது?


- இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பது இதயத்தைப் பாதிக்கிறது.
- ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களும் முட்டைகளை தவிர்ப்பது நல்லது. இது நிலைமையை மோசமாக்கக்கூடும்.
- வயிற்றுப் புண், அமிலத்தன்மை அல்லது அஜீரணப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகளை குறைவாகவே சாப்பிட வேண்டும்.
- சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக புரத உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும். ஆகையால் அவர்கள் முட்டைகளையும் குறைவாக சாப்பிட வேண்டும்.


ஒரு நாளைக்கு எவ்வளவு முட்டைகளை உட்கொள்ளலாம்?


ஒரு நாளைக்கு 1 முதல் 2 முட்டைகள் சாப்பிடலாம். எனினும், இதய நோயாளிகள் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடக்கூடாது. அதிக புரதம் தேவைப்படும் பாடி பில்டர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்கள் உணவில் அதிக முட்டைகளைச் சேர்க்கலாம். எடை குறைக்க விரும்புவோர் முட்டை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சுகர் லெவல் அதிகமா இருக்கா? தினமும் காலையில் இதை குடிங்க.. ஈசியா குறைக்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ