நமது உடலின் மிக முக்கிய உறுப்பான கல்லீரல், உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றவும், செரிமான நொதிகளை வெளியிடவும் செயல்படுகிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் கல்லீரல் தொடர்பான பல வகையான நோய்களை ஏற்படுத்துகின்றன.
கல்லீரலின் செயல்பாட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் சில உணவுப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இந்த கட்டுரையில், கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் அத்தகைய உணவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் கலீரலின் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கலாம்
கல்லீரல் செயல்பாடு: கல்லீரல் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். கல்லீரலின் வேலை செரிமான மண்டலத்திலிருந்து வரும் இரத்தத்தை உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்லும் முன் அதை வடிகட்டுவது. இது உடலுக்குள் ரசாயனங்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேற்றப்பட்டுகிறது. சுருக்கமாக, உடலை டீடாக்ஸ் செய்யும் ஃபேக்ட்ரியாக செயல்படுகிறது. இந்த கட்டுரையில், கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் அத்தகைய உணவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இனிப்புகள்: அதிக சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை குறிப்பாக மிட்டாய்கள், இனிப்பு குக்கீகள் போன்றவற்றை தயாரிப்பதில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த சர்க்கரையில் அதிக பிரக்டோஸ் உள்ளது, இது கொழுப்பு கல்லீரலை ஏற்படுத்தும்.
குளிர்பானங்களை உட்கொள்வது கல்லீரலுக்கு ஆபத்தானதாக கருதப்படுகிறது. குளிர்பானங்களில் அதிக சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகள் உள்ளன, அவை கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.
வலி நிவாரணி: தேவைக்கு அதிகமாக வலி நிவாரணிகளை உட்கொள்பவர்களுக்கு கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் சிறிய வலி நிவாரணியாக இருந்தாலும்,கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். மருத்துவர் பரிந்திரை இல்லாமல் வலிநிவாரணி எடுத்துக் கொள்வது தவறு.
அதிக சர்க்கரையை உட்கொள்ளக் கூடாது என்பது போல, அதிக உப்பை உட்கொள்ளக் கூடாது. அதிக உப்பை உட்கொள்வதால் கல்லீரலில் நீர் தேங்கிவிடும். இதனால் கல்லீரல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கும்.
பரோட்டா போன்ற மைதா மாவில் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளும் கல்லீரலுக்கு மோசமானதாக கருதப்படுகிறது. அதே போன்று தாவர எண்ணெய்கள் உள்ளிட்ட டிரான்ஸ் கொழுப்புகளை உட்கொள்வது கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.
சிவப்பு இறைச்சியை ஒருவர் அதிகமாக உட்கொள்ளக்கூடாது. உடலில் கூடுதல் புரதம் உற்பத்தியானால், அது கல்லீரல் தொடர்பான பல பிரச்சனைகளை உண்டாக்கும். கல்லீரல் கொழுப்பாக மாறலாம்.
அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆல்கஹால் அருந்துதல் கல்லீரல் செல்களை சேதப்படுத்தும். கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் இந்த பழக்கத்தை நிச்சயம் கைவிட வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.