Side Effects if Skipping Breakfast: காலை உணவு ஒரு நாளின் மிக முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. அனைவரும் கண்டிப்பாக காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். சிலர் உடல் எடையை குறைக்கவும் இப்படி செய்கிறார்கள். ஆனால், எந்த காரணத்திற்காகவும் காலை உணவை உட்கொள்ளாமல் இருப்பது தவறு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலை உணவை தவிர்ப்பது உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் உடலின் ஆற்றல் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இதன் காரணமாக மன மற்றும் உடல் ஆரோக்கியத்திலும் ஆழமான தாக்கம் ஏற்படும்.


காலை உணவைத் தவிர்ப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? காலை உணவை ஏன் புறக்கணிக்கக்கூடாது? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


ஆற்றல் குறைபாடு


காலை உணவு உங்கள் உடலுக்கு நாள் முழுவதும் தேவையான ஆற்றலை (Energy) வழங்குகிறது. இரவு நீண்ட நேரத்திற்கு உண்ணாமல் இருப்பதனால், காலை வேளையில் உடலுக்கு ஆற்றல் தேவைப்படும். காலை உணவைத் தவிர்த்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காது. இதன் விளைவாக, நாள் முழுவதும் நீங்கள் சோர்வாகவும், பலவீனமாகவும், சோம்பலாகவும் உணரக்கூடும். இது உங்கள் செயல்திறனை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அன்றாடச் செயல்பாடுகளைச் சரியாகச் செய்வதிலும் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 


வளர்சிதை மாற்றம்


காலை உணவைத் தவிர்ப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தில் (Metabolism) எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். நீங்கள் காலையில் எதையும் சாப்பிடவில்லை என்றால், உங்கள் உடல் அதை உபவாச நிலையாகக் கருதுகிறது. ஆகையால், ஆற்றலைப் பாதுகாக்க வளர்சிதை மாற்றத்தின் விகிதத்தை உடல் தானாக குறைக்கிறது. மெதுவான வளர்சிதை மாற்றம் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ஏனெனில் இதன் காரணமாக நாள் முழுவதும் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை குறைகிறது. ஆகையால், காலை உணவை உட்கொள்வது உங்கள் உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.


மேலும் படிக்க | வேகமா உடல் எடை குறையணுமா? இந்த தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்க


இரத்த சர்க்கரை அளவு குறையும்


காலை உணவைத் தவிர்த்தால் இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level) திடீரென குறையும். இதனால் உடல் காலையில் குளுக்கோஸ் பற்றாக்குறையை உணர்கிறது. காலை உணவை சாப்பிடவில்லை என்றால், இந்த குறைபாடு மேலும் அதிகரிக்கும். இதன் விளைவாக, மயக்கம், பலவீனம் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக, காலை உணவைத் தவிர்ப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாடற்ற நிலைக்குத் தள்ளும்.


மனநிலை மாற்றங்கள், எரிச்சல்


காலை உணவு உண்ணாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்தில் மட்டுமின்றி மன ஆரோக்கியத்திலும் (Mental Health) மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால், ​​மூளைக்கும் தேவையான அளவு ஆற்றல் கிடைப்பதில்லை. இதன் காரணமாக, மனநிலை மாற்றங்கள், எரிச்சல், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆகையால், நாள் முழுதும் அமைதியான மனநலம் இருக்க, காலையில் காலை உணவை உட்கொள்ள வேண்டியது மிக அவசியம்.


ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்


காலை உணவை உட்கொள்ளவில்லை என்றால், ​​மதிய வேளையில் பசி அதிகமாக எடுக்கும். இதன் காரணமாக, அவ்வப்போது ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை நீங்கள் உட்கொள்ளலாம். இந்த ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்களால் உடல் எடை அதிகரிப்பதோடு பிற உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பசியின் காரணமாக மதிய உணவு அல்லது இரவு உணவில் அளவுக்கு அதிகமாக சாப்பிடவும் நேரிடலாம். இது உடல் எடையை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். 


பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  


மேலும் படிக்க | மொபைல்போன்கள் பயன்பாடு மூளை புற்றுநோய்க்கு காரணமாகிறதா... WHO கூறுவது என்ன...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ