Symptoms of Fatty Liver: நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு பல உறுப்புகள் முக்கிய பங்களிக்கின்றன. அவற்றில் கல்லீரலும் ஒன்றாகும்.  கல்லீரல் உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக உள்ளது. இரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றுவது கல்லீரலின் முக்கிய பணியாக உள்ளது. கல்லீரல் மனித உடலின் இரண்டாவது மிக முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால், இது உடலில் இருக்கும் நல்ல ஊட்டச்சத்துக்களை சேமித்து வைப்பதோடு, புரதத்தையும் ஆற்றலையும் உற்பத்தி செய்கிறது. கல்லீரல் தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் கல்லீரலில் சதை அதிகரித்து கொழுப்பு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டால், இதனால் உடலில் கோளாறுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உருவாக காரணம் என்ன? இதன் ஆரம்ப அறிகிறிகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


கொழுப்பு கல்லீரல் என்றால் என்ன?


கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலில் உருவாகும் ஒரு பிரச்சனையாகும். இதில் கல்லீரல் பாதிக்கப்பட்டு அதன் செயல்பாடு பாதிக்கப்படுகின்றது. கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் இரண்டு வகைகள் உள்ளன. 


- முதல் வகை மதுபானம் அதிகமாக குடிப்பவர்களுக்கு ஏற்படுகின்றது.
- இரண்டாவது வகை மிகக்குறைந்த அளவில் மதுபானம் குடிப்பவர்களுக்கும், மது அருந்தாத, ஆனால் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்பவர்களுக்கும் ஏற்படுகின்றது. 


கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள்


கொழுப்பு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டால், உடலில் சில ஆரம்ப அறிகுறிகள் தோன்றும். இந்த அறிகுறிகள் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். அப்போதுதான், சரியான நேரத்தில் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். இல்லையெனில் பிரச்சனை அதிகரிக்கலாம். அந்த அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.


சோர்வு மற்றும் பலவீனம்


சோர்வு மற்றும் பலவீனம் கல்லீரல் பிரச்சனைகளின் பொதுவான அறிகுறியாக உள்ளது. போதுமான அளவு தூங்கி ஓய்வெடுத்த பின்னரும் அடுத்த நாள் உடலில் புத்துணர்ச்சி இல்லை என்றால், அது கொழுப்பு கல்லீரலின் அறிகுறியாக இருக்கலாம்.


வயிற்று வலி


மேல் வயிற்றில் வலி, மார்புக்கும் அடிவயிற்றுக்கும் இடையில் உள்ள பகுதியில் எரியும் உணர்வு, அசௌகரியம் ஆகியவை பொதுவான விஷயங்கள் அல்ல. இந்த அறிகுறிகள் கல்லீரல் தன் வேலையைச் சீராகச் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றன. 


உயர் இரத்த சர்க்கரை அளவு


கொழுப்பு கல்லீரல் பிரச்சனை பெரும்பாலும் நீரிழிவு மற்றும் பருமனானவர்களுக்கு ஏற்படுகின்றது. இரத்தத்தில் சர்க்கரை அளவ நீண்ட நேரம் இருந்தால், இதற்கு ஒரு காரணம் கொழுப்பு கல்லீரலாகவும் இருக்கலாம். இது டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.


மேலும் படிக்க | வாட்டி எடுக்கும் நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும்... சில சூப்பர் பானங்கள்


சிறுநீர் மற்றும் மலத்தின் நிறம்


கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால் சிறுநீர் மற்றும் மலத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படுகின்றது. கொழுப்பு கல்லீரலில், சிறுநீரின் நிறம் அடர் பழுப்பு நிறமாகவும், மலத்தின் நிறம் மஞ்சள் களிமண் போலவும் மாறும். 


சருமம் மற்றும் கண்களின் நிறம் மஞ்சள் நிறமாக மாறுவது


கொழுப்பு கல்லீல் பிரச்சனை இருந்தால், தோலின் நிறமும் மாறுகிறது. கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக இருப்பது கொழுப்பு கல்லீரலின் அறிகுறியாகும். மஞ்சள் காமாலை கொழுப்பு கல்லீரல் பிரச்சனையையும் குறிக்கிறது. கல்லீரலால் பிலிரூபினைச் செயலாக்க முடியாதபோது தோல் மற்றும் கண்களின் வெள்ளை நிறங்கள் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குவதால் இது நிகழ்கிறது.


அதிக கொழுப்பு


உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து இரத்தத்தில் கலப்பதாலும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை ஏற்படுகிறது. அதிகமாக மது அருந்துபவர்களுக்கு இது அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. மதுபானம் உட்கொள்வது உடலில் எல்டிஎல் அளவை அதிகரிக்கிறது. இது மாரடைப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது.


கொழுப்பு கல்லீரல் பிரச்சனை: இதை தடுக்க இவற்றை பின்பற்றலாம்


- தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது நல்லது.
- போதுமான அளவு, அதாவது சுமார் 7-8 மணி நேர உறக்கம் அவசியம்.
- ஆரோக்கியமான சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். 
- வறுத்த அல்லது பதப்படுத்தப்பட்ட உணவை அதிகம் உட்கொள்ள வேண்டாம்.
- ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும்.
- இரத்த சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
- மது அருந்துவதை நிறுத்த / குறைக்க வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 30 நாட்கள்... தினம் 4 நிமிடம் போதும்... தொப்பையை மளமளவென குறைக்கும் பிளாங்க் பயிற்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ