மாரடைப்பு அறிகுறிகள்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடும், உஷார் மக்களே
Heart Attack Symptoms: மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் சில அறிகுறிகள் நம் உடலில் தோன்றத் தொடங்குகின்றன.
Heart Attack Symptoms: இன்றைய காலகட்டத்தில் இதயம் சம்பந்தமான நோய்கள் பற்றி அதிகமாகக் கேள்விப்படுகிறோம். சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.79 கோடி பேர் இதய நோயால் இறக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், இதயம் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் (World Heart Day) கொண்டாடப்படுகிறது.
மாரடைப்பு அறிகுறிகள் (Heart Attack Symptoms)
இதயம் தொடர்பான நோய்களால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். இவற்றில், மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் ஏராளம். மருத்துவர்களின் கூற்றுப்படி, மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் சில அறிகுறிகள் நம் உடலில் தோன்றத் தொடங்குகின்றன. இருப்பினும், இவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடலாம். அனைவருக்கும் இவற்றை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
ஆண்களா பெண்களா? யாருக்கு ஆபத்து அதிகம்?
பெண்களை விட ஆண்களே மாரடைப்பினால் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனைக்கு வரும் மொத்த நோயாளிகளில், 60 சதவீதம் பேர் ஆண்கள் மற்றும் 40 சதவீதம் பேர் பெண்கள் என்று தரவுகள் குறிப்பிடுகின்றன. மாரடைப்பு ஆபத்து பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்குக் காரணம் இவர்களிடம் அதிகமாகக் காணப்படும் மன அழுத்தம்.
மாரடைப்பு அறிகுறிகள்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாரடைப்புக்கான அறிகுறிகள் எவ்வாறு வேறுபடுகின்றன?
ஆண்கள் மற்றும் பெண்களின் உடல் அமைப்பு வேறுபட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதேசமயம் பெண்களின் நுரையீரல், மூளை மற்றும் தசைகள் என பலவற்றின் அமைப்பும் ஆண்களிடமிருந்து வேறுபட்டது. இதயத்தின் அமைப்புடன், அது செயல்படும் விதமும் சற்று வித்தியாசமானது. ஆண்களை விட பெண்களுக்கு சிறிய இதயங்களும் குறுகிய இரத்த நாளங்களும் உள்ளன. அதேசமயம் ஆண்களுக்கு பெரிய இதயங்கள் மற்றும் பெரிய இரத்த நாளங்கள் உள்ளன. இந்த வேறுபாடுகள் காரணமாக, ஆண்களை விட பெண்களுக்கு இதய நோய்கள் வித்தியாசமாக உருவாகலாம்.
மேலும் படிக்க | இந்த உணவுகளை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் அம்பேல்! ஹெல்த் அலர்ட்
மாரடைப்பு எப்போது ஏற்படுகிறது?
தமனி சுவர்களில் கொலஸ்ட்ரால் பிளேக்குகள் குவிந்து இரத்த நாளங்களை சேதப்படுத்தத் தொடங்கும் போது, மாரடைப்பு (Heart Attack) ஏற்படுகிறது. ஆண்களில், இந்த பிளேக் பொதுவாக இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் மிகப்பெரிய தமனிகளில் குவிந்துவிடும். அதே சமயம் பெண்களில், மைக்ரோவாஸ்குலேச்சர் எனப்படும் இதயத்தின் மிகச்சிறிய இரத்த நாளங்களில் அவை உருவாகும் வாய்ப்பு அதிகம். ஆகையால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரும் மாரடைப்பு வேறுபட்டு இருக்கிறது.
மாரடைப்பு: ஆண்கள் மற்றும் பெண்களில் வெவ்வேறு அறிகுறிகள்:
ஆண்களுக்கு மாரடைப்புக்கான அறிகுறிகள்:
- அதிக வியர்வை
-நெஞ்சு வலி
- தொண்டை மற்றும் தாடையில் வலி
- சுவாசிப்பதில் சிரமம்
- நெஞ்செரிச்சல் மற்றும் பதட்டம்
பெண்களுக்கு மாரடைப்பின் அறிகுறிகள்:
-புளிப்பு ஏப்பம்
- மன அழுத்தம்
- குமட்டல்
- அஜீரணம்
- மூச்சுத் திணறல்
- விரைவாக சோர்வு ஏற்படுவது
- மயக்கம்
- தூக்கமின்மை
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? இந்த காயை தினமும் சாப்பிட்டால் சுகர் லெவல் குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ