இந்த உணவுகளை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் அம்பேல்! ஹெல்த் அலர்ட்

Bitter Side Bitter Gourd: பாகற்காய் சாப்பிட்டால் பல பிரச்சனைகள் தீரும் என்று சொன்னாலும், சிலருக்கு பாகற்காய் ஆரோக்கியத்திற்கும் வேம்பாக கசக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 29, 2023, 02:35 PM IST
  • பாகற்காயை பற்றிய பச்சைப் பொய்கள் என்னென்ன?
  • வேம்பாக கசக்கும் பாகற்காயின் தீமைகள்
  • பாகற்காயை எப்படி சாப்பிட்டால் தீமை செய்யும்?
இந்த உணவுகளை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் அம்பேல்! ஹெல்த் அலர்ட் title=

புதுடெல்லி: சுவையில் கசப்பைத் தரும் பாகற்காய், பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும் இந்தக் காயை பலரும் விரும்பி உண்பதில்லை. ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பாகற்காய் பரிந்துரைக்கப்படுகிறது. பல நோய்களை குணப்படுத்தும் குணமும், சில நோய்களை வரவிடாமல் தடுக்கும் குணமும் கொண்ட தனித்துவமான காய் என்பது பாகற்காயின் தனிச்சிறப்பு ஆகும். ஆனால், பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும், பாகற்காய் ஒரு தனித்துவமான கசப்பான சுவை கொண்டது, பாகற்காய் என்றால் பத்தடி ஓடுபவர்களையும் பார்த்திருக்கலாம். 

ஆனால், நோயில்லா வாழ்வுக்கு நீங்கள் உட்கொள்ளும் உணவுகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று சொல்லி, பாகற்காயை கட்டாயப்படுத்தி உண்ணச் சொல்வார்கள். பாகற்காய், ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றபோதிலும், சில உணவுகள் பாகற்காயுடன் சேர்ந்தால், விரும்பத்தகாத சுவையை கொடுக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆரோக்கியமான மற்றும் கசப்பு சுவை கொண்ட பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்.  

பால் பொருட்கள்

பாகற்காயுடன் செர்த்து பால் பொருட்களை உட்கொள்வது, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் உடலின் திறனை பாதிக்கலாம். ஏனென்றால், பால் பொருட்களில் உள்ள கால்சியம், பாகற்காயில் உள்ள சேர்மங்களுடன் பிணைக்கப்படலாம், இதனால் நமது உடலின் உறின்சும் தன்மை குரைகிரது. பாலில் உள்ள கால்சியத்துக்கும், பாகற்ககயில் உள்ள இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற உறிஞ்சுதலுக்கான மற்ற தாதுக்களுக்கும் போட்டி ஏற்பட்டால், பாகற்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மட்டுப்பட்டுவிடும்.

மேலும் படிக்க | இதயம் உங்களுடையதாக இருந்தாலும், இவை உங்களுக்கு தெரியாது! நீண்ட ஆயுள் வாழ டிப்ஸ்

எனவே, பாகற்காயை பால் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பால், பாலாடைக்கட்டி, தயிர் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவை பாகலுடன் சேர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய பொதுவான பால் பொருட்கள் ஆகும். பாகற்காயில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் பால் குறுக்கிடுவதைத் தவிர்க்க, பாலுக்கு பதிலாக, பாதாம் பால், தேங்காய் பால் அல்லது சோயா பால் போன்ற மாற்று பால் பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.  

இனிப்பு பழங்கள்

கசப்பான பாகற்காயுடன் இனிப்புப் பழங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை இரத்த சர்க்கரையைக் குறைக்கும் விளைவுகளை குறைக்கும் பாகற்காயின் தன்மையை மட்டுப்படுத்திவிடும். பாகற்காயில் உள்ள சரண்டைன் மற்றும் பாலிபெப்டைட்-பி எனப்படும் சேர்மங்கள், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் வேலை செய்கின்றன. இருப்பினும், வாழைப்பழங்கள், திராட்சைகள் அல்லது மாம்பழங்கள் போன்ற இனிப்பு பழங்கள் உண்ணும்போது, பாகற்காயை உண்டால், இரத்த சர்க்கரை அளவை குறையாது. ஏனெனில் அவை இயற்கையான சர்க்கரைகளைக் கொண்டுள்ளன.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகளை, பாகற்காயுடன் சேர்த்து உட்கொள்வது செரிமான அமைப்பை கடினமாக்கும் மற்றும் செரிமானத்தை மெதுவாக்கும். வறுத்த உணவுகள் பொதுவாக கொழுப்புச் சத்து அதிகம் கொண்டவை என்பதால், ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அவற்றுடன் உட்கொள்ளும் மற்ற உணவுகள் செரிமானம் ஆவதில் தாமதம் ஏற்படுகிறது. இது வயிற்று உப்புசம், குமட்டல், அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

பாகற்காயின் நார்ச்சத்து

நார்ச்சத்து நிறைந்த பாகற்காய், செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஒழுங்கை மேம்படுத்துகிறது. ஆனால், பாகற்காயை வறுத்த உணவுகளுடன் உட்கொள்வது செரிமான அமைப்பு மூலம் உணவின் இயக்கத்தை மெதுவாக்கும் மற்றும் கரேபாகற்காயின் லாவில் உள்ள நார்ச்சத்தின் செயல்திறனைக் குறைக்கும்.

எனவே அதற்கு பதிலாக, ஆரோக்கியமான செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை ஊக்குவிக்க, வேகவைத்த அல்லது லேசாக சமைத்த காய்கறிகள் அல்லது முழு தானியங்கள் போன்ற ஜீரணிக்க எளிதான உணவுகளுடன் பாகற்காயை உண்ண வேண்டும்.  

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பு கரைய, எடை குறைய.. இந்த 5 பழக்கங்கள் அவசியம்

மது அருந்துதல்

பாகற்காய் உண்ணும்போது மது அருந்துவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது. பாகற்காயை செயலாக்கும் கல்லீரலின் திறனில் ஆல்கஹால் குறுக்கிடலாம், இது நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். கரேன்டின் மற்றும் பாலிபெப்டைட்-பி போன்ற சேர்மங்கள் இருப்பதால் பாகற்காய் அதன் இரத்த சர்க்கரையை குறைக்கும் திறனுக்காக அறியப்படுகிறது. இருப்பினும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் ஆல்கஹால் இந்த விளைவைத் தடுக்கலாம்.

காஃபின்

பாகற்காயில் உள்ள சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் காஃபின் குறுக்கிடலாம் என்பதால், பாகற்காய் உண்ணும்போது காஃபின் கொண்ட பொருட்கள் மற்றும் காபியை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, பாகற்காயில் உள்ள இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களை உறிஞ்சுவதை காஃபின் குறைக்கும். 

பல்வேறு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவாக பாகற்காய் இருந்தாலும், இந்த ஊட்டச்சத்துக்கள் மோசமாக உறிஞ்சப்படுவதை காஃபின் தடுக்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? இந்த காயை தினமும் சாப்பிட்டால் சுகர் லெவல் குறையும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News