Symptoms of High Cholesterol in Women: ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கின்றது. இதனால் உடலில் பல வித உபாதைகள் ஏற்படுகின்றன. நமது உடலில் ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் இருப்பது முக்கியம். ஆரோக்கியமான கொலஸ்ட்ராலின் உதவியால்,  உடலில் புதிய செல்கள் உருவாகின்றன. இது மட்டுமின்றி இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்களிப்பை அளிக்கின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு மிக வேகமாக அதிகரிக்கின்றது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது பல கொடிய நோய்களுக்கு காரணமாகலாம். குறிப்பாக பெண்களுக்கு இது அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. ஆண்களை விட மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. ஆகையால் பெண்கள் இந்த விஷயத்தில் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 


ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், எந்த வித சிறப்பு அறிகுறிகளும் காணப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நபர் முற்றிலும் ஆரோக்கியமாக தோன்றினாலும், அவருக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அதிக கொலஸ்ட்ரால் காரணமாக ஏற்படும் மற்ற நோய்களின் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும் போதுதான் அதிக கொலஸ்ட்ரால் பற்றியும் நமக்குத்  தெரிய வருகின்றது. பெண்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் உடலில் தென்படக்கூடிய சில பொதுவான அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.  


கால்களில் வலி


கால்களில் வலி ஏற்படுவது, கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். கொலஸ்ட்ரால் காரணமாக, கால்களில் இருக்கும் இரத்த நாளங்கள் தடைபடுவது அல்லது சுருங்குவதுதான் கால்களில் வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. கொலஸ்ட்ரால் அதிகரித்தால், பெண்கள் நடக்கும்போது அல்லது உடல் செயல்பாடுகளைச் செய்யும்போது, ​​அவர்களின் கால்களில் வலி தொடங்குகிறது. கொலஸ்ட்ரால் அளவு மிக அதிகமானால், சாதாரணமாக நடக்கும்போதும், பாதங்களில் வலி ஏற்படும். ஆகையால் கால் வலி இருந்தால் உடனடியாக கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்வது நல்லது.


மேலும் படி | எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க... உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டியவை!


அதிகமாக வியர்ப்பது


கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், சிலருக்கு அதிகமாக வியர்க்க ஆரம்பிக்கும். உடல் முழுவதும் ஆக்ஸிஜன் சரியாக வழங்கப்படாததால் இது நிகழ்கிறது. இரத்த ஓட்டம் தடைபடுவது ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கான காரணம் ஆகும். கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், பல இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இரவில் தூங்கும் போது அடிக்கடி வியர்த்தால், அதை லேசாக எடுத்துக்கொள்ளாமல் கொலஸ்ட்ரால் அளவை ஒருமுறை பரிசோதித்துக்கொள்வது நல்லது.


நெஞ்சு வலி


கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது தமனிகள் பாதிக்கப்படுகின்றன. இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் கொலஸ்ட்ரால் சேர்ந்தால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், பெண்களுக்கு மார்பு வலி ஏற்படலாம். கரோனரி தமனி தொடர்பான நோய்களும் ஏற்படலாம். ஆகையால், பெண்கள் அனைவரும் கரோனரி ஆர்டரி நோயின் அறிகுறிகளுக்கு கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும். 


கண்களில் பலவீனம்


பல நேரங்களில், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, ​​அதன் தாக்கம் கண்களிலும் காணப்படுகிறது. உயர் கொலஸ்ட்ரால் காரணமாக, கண்பார்வை மங்கலாகலாம். பார்வையை முற்றிலும் இழக்கும் அபாயமும் உள்ளது. ஆகையால் கண் பார்வையில் ஏதேனும் பிரச்சனை தெரிந்தால் உடனடியாக மருத்துவரை பார்த்து ஆலோசனை பெறுவது நல்லது. 


கொலஸ்ட்ரால் அதிகமானால் இந்த அறிகுறிகள் கண்டிப்பாகத் தோன்றும் என அவசியமில்லை. இந்த அறிகுறிகள் காணப்படலாம், அல்லது இந்த அறிகுறிகள் ஏதும் தென்படாமலும் இருக்கலாம். ஆகையால், கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது என்ற சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா? இந்த சம்மர் பழங்களை சாப்பிட்டால் சுலபமா குறைக்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ