)
Food For Strong Bones: வயது அதிகமாக அதிகமாக, உடலில் உள்ள எலும்புகளும் பலவீனமடைய தொடங்குகின்றன. குறிப்பாக 35 வயதுக்குப் பிறகு, உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படத் தொடங்குகிறது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. முழங்கால்களில் வலி அல்லது இடுப்பு அல்லது கை மற்றும் கால்களின் எலும்புகளில், மூட்டுகளில் வலி ஆகியவை பலவீனமான எலும்புகளின் அறிகுறிகளாக இருக்கலாம்.
பலவீனமான எலும்புகள் உடலின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன. இதனால் சில சமயங்களில், எழுந்திருப்பது மற்றும் உட்காருவது கூட கடினமாகலாம். எனவே, எலும்புகளை வலுப்படுத்துவது அவசியம். எலும்புகளின் பலவீனத்தை நீக்கி, எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக்க, டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டிய சில உணவுப் பொருட்களை இங்கே காணலாம்.
வலுவான எலும்புகளுக்கான உணவுகள்
உலர் பழங்கள்:
உலர் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. உலர் பழங்களில் எலும்புகளை வலுவூட்டும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. உலர் பழங்களில் கால்சியம் மட்டுமல்ல, எலும்பு வலுவாக இருக்க தேவையான மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் அதிகம் உள்ளன. எனவே, உலர் பழங்களை சிற்றுண்டிகளாக சாப்பிடுவது அல்லது மில்க் ஷேக், சாலட் போன்றவற்றில் சேர்ப்பது எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை (Health Tips) வழங்கும்.
பால் மற்றும் பால் பொருட்கள்:
பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்றவற்றில் கால்சியம் நிறைந்துள்ளது. எலும்புகளின் வலிமை மற்றும் கட்டமைப்பை பராமரிக்க இது உதவும். மேலும், இதில் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்களும் உள்ளன. குறிப்பாக குழந்தைகளின் எலும்புகளும் பற்களும் வலுவாக இருக்க தினமும் பால் கொடுப்பது அவசியம்.
கீரை:
பால் மற்றும் தயிர் மட்டுமின்றி மற்ற சில உணவுப் பொருட்களிலும் கால்சியம் அதிகள் உள்ளது. நல்ல அளவு கால்சியம் சத்து உள்ள பச்சைக் காய்கறிகளில் கீரையும் ஒன்று. வேகவைத்த கீரையை ஒரு கப் சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு தினசரி தேவைப்படும் கால்சியத்தில் 25 சதவீதம் கிடைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். இது தவிர கீரையில் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது.
சிட்ரஸ் பழங்கள்:
எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்ஷியம் மட்டுமல்ல, வைட்டமின் சி சத்தும் மிகவும் அவசியம். அதனால், சிட்ரஸ் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாக கருதப்படும் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் கால்சியம் காணப்படுகின்றன. இதற்கு, எலுமிச்சை ஆரஞ்சு, கொய்யா, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பிற சிட்ரஸ் பழங்களை தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.
வாழைப்பழம்:
எலும்புகளுக்கு நன்மை பயக்கும் பழங்களில் வாழைப்பழமும் அடங்கும். இதில் நல்ல அளவு மெக்னீசியம் உள்ளது. இது எலும்புகளை உருவாக்க உதவுகிறது. மேலும் பற்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். அனைத்து பருவ காலத்திலும் கிடைக்கும் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், எலும்புகள் வலுவடையும்.
சோயா உணவுகள்:
சைவ உணவு உண்பவர்களுக்கான புரத சத்து நிறைந்த சிறந்த உணவு சோயா. தாவர அடிப்படையிலான புரதத்தை தங்கள் உணவில் சேர்க்க விரும்புபவர்கள் சோயாபீன் மற்றும் சோயா பொருட்கள் டோஃபு, சோயா பால் மற்றும் சோயா துண்டுகள் போன்றவற்றை தங்கள் உணவில் சேர்க்கலாம். எலும்புகளை கட்டமைக்கவும் வலுப்படுத்தவும் புரதம் இன்றியமையாதது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ