கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா? இந்த சம்மர் பழங்களை சாப்பிட்டால் சுலபமா குறைக்கலாம்

Cholesterol Control Tips: இந்நாட்களில் பலரிடம் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை காணப்படுகின்றது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் இதய கோளாறுகள் உட்பட இன்னும் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. 

Cholesterol Control Tips: அதிக கொலஸ்ட்ரால்  ஒரு அமைதியான கொலையாளியை போன்றது. ஆகையால் இதை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும். கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இந்த காலத்தில் நாம் நமது உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள பழங்களை அதிகம் உட்கொள்கிறோம். சில பழங்கள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றன. வெண்ணெய் போல கொழுப்பை கரைக்க உதவும் சில கோடை பழங்களை பற்றி இங்கே காணலாம். 

1 /8

வாழைப்பழம்: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் உயர் இத்த அழுத்தம் ஏற்படாமலும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காமலும் தடுக்கலாம். வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. அவை இதய நோய்க்கானஅபாயத்தைக் குறைக்கின்றன.

2 /8

ஆப்பிள்: கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் ஆப்பிள் மிகச் சிறந்தது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்தான 'பெக்டின்' உள்ளது. இது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆப்பிளிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

3 /8

மாம்பழம்: கோடையில் மாம்பழம் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். மாம்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. அவை கொலஸ்ட்ரால் அளவையும் வீக்கத்தையும் குறைக்கின்றன. மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

4 /8

தர்பூசணி: கோடை காலத்தில் நாம் அதிகமாக உட்கொள்ளும் தர்பூசணியில் கலோரி அளவு குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். தர்பூசணியில் லைகோபீன் உள்ளது. இது அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

5 /8

திராட்சை: திராட்சைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும். இது தவிர, திராட்சையில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

6 /8

கொய்யாப்பழம்: நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கொய்யா எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. கொய்யா இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதில் உள்ள அதிக அளவு பொட்டாசியம், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.  

7 /8

பப்பாளி: பழுத்த பப்பாளியில் பாப்பைன் என்ற கலவை உள்ளது. இது செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது. பப்பாளியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.