Gut Health: இன்றைய நவீன காலகட்டத்தில் மக்கள் பிஸியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக பல நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்த நோய்களால் உடலின் பல உறுப்புகள் சேதமடைகின்றன. உணவுமுறை ஆரோக்கியமாக இல்லாத காரணத்தால் மென்னெப்போதும் இல்லாத அளவிற்கு குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது இப்பொழுது மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடல்கள் உணவை ஜீரணிப்பதிலும் சத்துகளை உறிஞ்சுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுமட்டுமின்றி இவற்றின் தாக்கம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திலும் தென்படுகின்றது. இவற்றின் ஆரோக்கியம் சீராக இல்லை என்றால் பல வித பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


பல்வேறு காரணங்களால் குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக முக்கியமானதாகிவிடுகின்றது. குடல்களில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான அறிகுறிகளை உடல் காண்பிக்கும். ஆகையால் இவற்றின் புரிதலோடு இருப்பது நல்லது. குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் பொழுது நம் உடலில் தென்படும் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.


குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதை காட்டும் ஐந்து முக்கிய அறிகுறிகள்


செரிமானம் தொடர்பான பிரச்சனைகள்
அஜீரணம் வாயுத்தொல்லை வயிற்றுப்போக்கு உப்பசம் மலச்சிக்கல் ஆகியயவை குடல் ஆரோக்கியம் நன்றாக இல்லை என்பதற்கான ஆரம்ப அறிகுறிகளாக கருதப்படுகின்றன.


மேலும் படிக்க | பதறவைக்கும் டெங்கு காய்ச்சல்: நோயாளிகள் விரைவில் குணமாக உதவும் இயற்கையான பானங்கள்


சரும பிரச்சனைகள்
அரிப்பு, தோல் அழற்சி, முகப்பரு ஆகிய சரும பிரச்சினைகள் குடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை.


ஒவ்வாமை
உணவுப் பொருட்களுக்கான ஒவ்வாமை, பருவகால ஒவ்வாமை ஆகியவை குடல் ஆரோக்கியத்தில் சீரற்ற நிலையை குறிக்கின்றன.


சோர்வு
ஒருவர் காரணமே இல்லாமல் மிகவும் சோர்வாக (Fatigue) இருந்தாலோ அல்லது அவரது ஆற்றல் குறைவாக இருந்தாலும் அது குடல் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.


மனநல பிரச்சனைகள்
மனநிலை மாற்றங்கள், கவலை, மன அழுத்தம், ஆகியவை குடல் ஆரோக்கியத்திற்கும் மூளைக்கும் இடையிலான தொடர்புடன் இணைக்கப்பட்டு பார்க்கப்படுகின்றன.


குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி?


- குடல் ஆரோக்கியத்தை சீர் செய்ய ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது இன்றியமையாததாகும்.


- காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், தயிர் போன்ற ப்ரோபயாட்டிக் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.


- குடல் ஆரோக்கியத்தை சீராக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.


- தினமும் உடற்பயிற்சி செய்தால் செரிமான அமைப்பு பலப்படுவதோடு குடல் ஆரோக்கியமும் மேம்படுகின்றது.


- மன அழுத்தம் (Mental Tension) குடல் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கின்றது. யோகாசனம், தியானம், சுவாச பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும்.


சீரான உடல் ஆரோக்கியத்திற்கு குடல் ஆரோக்கியம் மிகவும் அவசியமாகும். ஆகையால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை கண்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மாரடைப்பு வரும் முன் கால்களில் இந்த அறிகுறிகள் தெரியும்: அலர்டா இருங்க மக்களே!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ