Dengue Fever: மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் பொதுவாக டெங்கு பாதிப்பு அதிகரிக்கின்றது. இது நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட Aedes aegypti கொசு கடிப்பதால் ஏற்படுகின்றது. டெங்கு காய்ச்சல் தீவிரம் அடைந்தால் இதனால் சிலருக்கு உயிர் போகவும் வாய்ப்பு உள்ளது.
ஆகையால் மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்து வரும் நபர்கள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் டெங்கு காய்ச்சலால் உடலின் பல அங்கங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக டெங்குவில் இருந்து மீண்டு வர ஆரோக்கியமான பல சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது அவசியமாக கருதப்படுகின்றது. டெங்கு நோயாளிகள் விரைவில் குணமாக குடிக்க வேண்டிய சில ஆரோக்கியமான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பப்பாளி இலை சாறு
டெங்கு காய்ச்சல் காரணமாக உடலில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைகின்றது. இந்த நிலையில் பப்பாளி இலைகளின் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவாக குணமடைய இந்த சாறை தினமும் குடிக்க வேண்டும். பப்பாளி இலை சாற்றின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடைகின்றது.
பப்பாளி இலை சாறு செய்வது எப்படி
பப்பாளி இலை சாறு செய்வது மிகவும் சுலபமாகும். பப்பாளி இலைகளை சுத்தம் செய்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின் இந்த சாற்றை மிகக் குறைந்த அளவில் நோயாளிக்கு கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை உட்கொள்ளலாம்.
மேலும் படிக்க | மாரடைப்பு வரும் முன் கால்களில் இந்த அறிகுறிகள் தெரியும்: அலர்டா இருங்க மக்களே!!
கிலோய் சாறு
கிலோய் எனப்படும் சீந்தில் ஆயுர்வேதத்தில் மிக முக்கியமான மூலிகையாக கருதப்படுகின்றது. டெங்கு நோயாளிகளுக்கு கிலோய் சாறு குணமடைய உதவியாக இருக்கின்றது. இதன் சுவை அவ்வளவு நன்றாக இருக்காது என்றாலும் இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கிலோய் சாறு லேசான கசப்பு சுவை கொண்டிருக்கும். இதை குடிப்பதால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் மேம்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது. டெங்கு நோயாளிகள் தினமும் கிலோய் சாறை சிறிய அளவில் பருகலாம். கிலோய் சாறு பருகுவதன் மூலம் டெங்குவிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
கிலோய் சாறு செய்வது எப்படி
இந்த சாறை செய்ய ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு கிலோய் தண்டுகளை போட்டு நன்றாக கொதிக்க விடவும். பின்னர் இதை வடிகட்டி உட்கொள்ளலாம்
மூலிகை தேநீர்
டெங்கு நோயாளிகள் டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட துளசி தேநீர் குடிக்கலாம். துளசியில் இருக்கும் மருத்துவ குணங்கள் தொற்றை குறைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகின்றன. தினமும் காலையில் துளசி தேநீர் குடித்து வந்தால் டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்
இளநீர்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இளநீரும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டெங்குவில் இருந்து நிவாரணம் பெற தினமும் இதை உட்கொள்ளலாம். இளநீர் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த சாறுகளை உட்கொள்ளும் முன்னர் உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் ஒருமுறை கலந்தாலோசிப்பது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கண்களில் இந்த அறிகுறிகள் இருக்கா? சுகர் லெவல் எகிறுது... ஜாக்கிரதை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ