இளைஞர்களிடையே அதிகமாகும் கேன்சர்: அலர்டா இருங்க மக்களே
Cancer: நமது நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூர்மையான அதிகரிப்பைக் கண்டுள்ளது.
Cancer: இன்றைய காலகட்டத்தில் பல தீவிர நோய்கள் பலரை பாடாய் படுத்தி வருகின்றன. அவற்றில் புற்றுநோயும் ஒன்று. அந்த காலம் முதல் இந்த காலம் வரை புற்றுநோய் ஒரு கொடிய விஷயமாக உள்ளது. இது ஒரு கொடூரமான நோய். இதன் பெயரைக் கேட்டாலே அனைவரையும் பீதி பற்றிக்கொள்ளும். முந்தைய காலங்களில், இது வெகு சிலருக்கே ஏற்பட்டது. ஆனால், இன்றளவில் புற்றுநோய் பலருக்கு ஏற்படுவதை நாம் காண்கிறோம். குறிப்பாக, இளைஞர்களை இது வெகுவாக பாதிக்கிறது.
சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் இளைஞர்களிடையே புற்றுநோய் பாதிப்புகள் ஆபத்தான அதிகரிப்பைக் கண்டுள்ளன. இது கவலை அளிக்கும் ஒரு சூழ்நிலையாகும். புற்றுநோய் தற்போது இளைஞர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக தரவுகள் கூறுகின்றன. நமது நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூர்மையான அதிகரிப்பைக் கண்டுள்ளது. 2020 இல் 13.9 லட்சமாக இருந்த எண்ணிக்கை 2025 க்குள் 15.7 லட்சமாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்களை பாதிக்கும் சில குறிப்பிட்ட வகையான புற்றுநோய்களை பற்றி இங்கே காணலாம்.
பெருங்குடல் புற்றுநோய்: பெருங்குடல் புற்றுநோய் (Colon Cancer), பெரிய குடலை பாதிக்கிறது. இளைஞர்களிடையே இந்த வகையான புற்றுநோய் அதிகரித்து வருகின்றது. மோசமான உணவுப் பழக்கம், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை மற்றும் மரபணு முன்கணிப்பு ஆகியவை இதற்கான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
மேலும் படிக்க | இனிப்பு சாப்பிடுவது மட்டுமல்ல... இந்த பழக்கங்களும் சுகரை எகிற வைக்கும்
தலை மற்றும் கழுத்து புற்றுநோய்: தலை மற்றும் கழுத்து புற்றுநோயில் வாய், தொண்டை, மூக்கு மற்றும் சைனஸ் புற்றுநோய் ஆகியவை அடங்கும் இளைஞர்களிடையே இது அதிகரிப்பதற்கு புகையிலை பயன்பாடு, மது அருந்துதல் மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) போன்ற காரணிகள் காரணமாகலாம்.
நுரையீரல் புற்றுநோய்: நுரையீரல் புற்றுநோய்க்கு (Lung Cancer) புகைபிடித்தல் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் பேசிவ் ஸ்மோகிங் ஆகியவையும் இளைஞர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணங்களாக உள்ளன. நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் ஆகியவையும் இதற்கு காரணமாகின்றன.
லுகேமியா: லுகேமியா (Leukemia), குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு வரும் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது. அதற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், மரபணு காரணிகள் மற்றும் சில இரசாயனங்கள் மற்றும் கதிர்வீச்சு வெளிப்பாடுகள் இதில் முக்கிய பங்கு வகிக்கலாம் என கூறப்படுகின்றது.
வயிற்றுப் புற்றுநோய்: வயிற்றுப் புற்றுநோயால் (Stomach Cancer) பாதிக்கப்படுபவர்களின் விகிதம் குறைந்திருந்தாலும், 2016-ல் இருந்து இந்தியாவில் இளம் வயது இரைப்பை புற்றுநோய் அதிகரித்துள்ளது. இந்த புற்றுநோய் பெரும்பாலும் இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுகின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை.... வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ