ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உணவு பழக்கம் தேவை என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆரோக்கியமான பழக வழக்கத்தினால் உடல் தேவையான ஊட்டச்சத்தை எளிதாக பெறும்.
நான் உண்ணும் உணவு மட்டுமல்லாது உணவை சாப்பிடும் விதமும் ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பு உள்ளவை. சிறந்த உணவே என்றாலும் தவறான முறையில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க, காலையில் சரியான உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். சில உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்ற இருக்கும் நிலையில், சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சில உணவுகள், உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டதாக இருந்தாலும், அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கும். ஆரோக்கியமாக இருக்க வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
பச்சை வெங்காயம்: வெங்காயத்தில் உள்ள பிரக்டோஸ் ஜீரணிக்க கடினமாக இருப்பதால், வெறும் வயிற்றில் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் வயிற்றில் வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
காபி: நம்மில் பலருக்கு காபி குடித்தால் தான், அன்றைய நாள் நன்றாக தொடங்குவது போன்ற இணர்வு இருக்கும். ஆனால், வெறும் காபி வெறும் வயிற்றில் காபி குடித்து நாளைத் தொடங்குவது நல்லதல்ல என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். காபியில் உள்ள டானின் நாள் முழுவதும் அமில வீக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் இதனால் நெஞ்செரிச்சல், வாயு பிரச்சனைகள் மற்றும் வயிற்றில் அமில அளவு அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழத்தில் அதிக அளவு ப்ரோமிலைன் உள்ளது. எனவே, காலையில் வெறும் வயிற்றில் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். இது தவிர, ப்ரோமெலைன் வயிற்று அமிலத்துடன் கலந்து, குடல் சுவர்களை பாதிக்கலாம்.
தக்காளி: தக்காளியில் ஏராளமான டானிக் அமிலம் உள்ளதால், இது வயிற்றில் அமிலத்தன்மை மற்றும் புளிப்பு ஏப்பத்தை ஏற்படுத்தும். இது தவிர, தக்காளியில் இருக்கும் அமிலத்தன்மை, வயிற்றில் இருக்கும் இரைப்பை குடல் அமிலத்துடன் வினைபுரிந்து, வயிற்று வலி மற்றும் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களில் அதிகப்படியான அமிலத்தன்மை இருப்பதால், இதனை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிடுவதால், பின்னாளில் அல்சர் உள்பட சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
மாம்பழம்: மாம்பழத்தில் ஏராளமான நார்ச்சத்து, பல வகையான வைட்டமின்கள் மற்றும் இயற்கை சர்க்கரை உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் அதிக அளவு மாம்பழத்தை உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது. இது வயிற்றில் வீக்கம் மற்றும் வாயு பிரச்சனையை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.