சிசேரியன் காயங்கள் குணமடைய என்ன செய்ய வேண்டும்? இதோ சில டிப்ஸ்..
சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும தாய் மார்களுக்கு அந்த காயம் விரைவில் ஆறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? டிப்ஸை இங்கு பார்ப்போம்.
மனிதர்களின் குணாதிசயம் ஒவ்வாெருவருக்கும் ஒவ்வொரு விதமாக மாறுபடுவது போல, அவர்களின் உடலும் ஒருவருக்கொருவர் மாறுபடும். ஒரு சிலருக்கு சுக பிரசவம் ஏற்படுவது போலவே, சிசேரியன் எனப்படும் சி-செக்ஷன் எனும் சிசேரியன் பிரசவமும் நடைபெறுவது வழக்கம். இந்த முறையில், குழந்தை பிறந்த பின்பு, இதற்காக மேற்கொண்ட சிகிச்சையின் தையல் ஆறுவதற்கு சில காலங்கள் எடுக்கலாம். விரைவில் இந்த தையல் ஆறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்..
சிசேரியன் முறை என்றால் என்ன?
சிசேரியன் சிகிச்சையை, அறுவை சிகிச்சை பிரசவ முறை என்றும் கூறுவர். இந்த முறை, நான்கு நூற்றாண்டுகளாகவே தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வருகிறதாம். 1970களில் ஆங்காங்கே நடைப்பெற்ற சிசேரியன் பிரசவங்களின் விகிதங்கள் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளன. சுக பிரசவத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டால், தாய் மார்கள் சிசேரியன் பிரசவத்தை தேர்வு செய்யலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தாய்-சேயின் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையில், இந்த முறை தேர்ந்தெடுக்கப்படுகிறது.
பிரசவ வலிக்கு பிறகு, தாயின் அடிவயிற்ற்லும் கருப்பையிலும் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியில் எடுக்கப்படும். குழந்தை பிறப்பிற்கு பின்னர், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடத்திலும் கருப்பையிலும் தையலிடப்படும். சிசேரியன் நேரத்தை விட, அதற்கு அடுத்த நேரங்களில் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த காயம் வெகு விரைவில் ஆறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? இங்கு டிப்ஸை பார்க்கலாம்.
நல்ல ஓய்வு:
எந்த அறுவை சிகிச்சைக்கு பிறகும், நன்றாக ஓய்வெடுக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால் புதிதாக குழந்தை பிறந்திருக்கும் போது எந்த தாய்மார்களுக்கும் ஓய்வெடுப்பது என்பது சிரமம்தான். ஆகையால், குழந்தை எப்போதெல்லாம் உறங்குகிறதோ அப்போதெல்லாம் அவர்களும் உறங்கி ஓய்வெடுப்பது மிகவும் முக்கியமாகும்.
மேலும் படிக்க | ஜிம், டயட் இல்லாமலேயே வேகமா எடை குறைய இந்த சூப்பர் உணவுகள் உதவும்
பிறரிடம் உதவி கேட்பது...
குழந்தை பெற்றெடுத்தவுடன் அவர்களை பார்த்துக்கொள்வது என்பதே மிகவும் சிரமமான காரியமாக இருக்கும். எனவே, அனைத்தையும் தனியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டாம். அருகில் இருப்பவர்களிடம் உதவி கேட்பதில் தவறில்லை.
நடைப்பயிற்சி:
உடற்பயிற்சி செய்வதோ, எடை அதிகமான பொருட்களை தூக்குவதோ அறுவை சிகிச்சை செய்த புதிதில் செய்வது கடினமாகும். எனவே, முடிந்த அளவிற்கு ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது நடைப்பயிற்சி செய்து பழகலாம்.
வலியை சமாளிக்க..
அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் வலி ஏற்படலாம். இதற்கு உங்களின் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக்கொள்லலாம். அப்படி இருந்தும் அதிகளவில் வலி ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது.
தொற்று:
அறுவை சிகிச்சை செய்த 24 மணி நேரத்திற்கு இன்ஃபெக்ஷன் ஏதேனும் ஆகியிருக்கிறதா என மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பர். அதன் பிறகும் கூட, அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
மலச்சிக்கல்:
குழந்தை பிறப்பு, குழந்தை பிறந்ததற்கு பிறகு ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகள் காரணமாக மலச்சிக்கல் ஏற்படலாம். அதே சமயத்தில் வெகு நேரம் படுத்தே இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படலாம். அதனால் நன்றாக தண்ணீர் குடித்து, மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிகவும் நல்லதாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சம்மரில் சுகர் லெவலை கட்டுப்படுத்த இந்த டயட் பிளான் ட்ரை பண்ணுங்க: அசந்து போவீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ