ஜிம், டயட் இல்லாமலேயே வேகமா எடை குறைய இந்த சூப்பர் உணவுகள் உதவும்

Weight Loss Tips: காலை உணவில் முட்டை உட்கொள்வதால், நீண்ட நேரம் உடலுக்கு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் நாள் முழுவதும் நாம் உட்கொள்ளும் கலோரி அளவு குறைகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 13, 2024, 11:22 AM IST
  • காலை உணவில் முட்டை உட்கொள்வதால், நீண்ட நேரம் உடலுக்கு நிரம்பிய உணர்வு இருக்கும்.
  • இதனால் நாள் முழுவதும் நாம் உட்கொள்ளும் கலோரி அளவு குறைகிறது.
  • புரதம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகவும் இது உள்ளது.
ஜிம், டயட் இல்லாமலேயே வேகமா எடை குறைய இந்த சூப்பர் உணவுகள் உதவும் title=

Weight Loss Tips: உடல் எடை குறைய வேண்டுமா? தொப்பை கொழுப்பு கரைய வேண்டுமா? இந்த கேள்வியை கேட்டால், நம்மில் பலரது பதில் ஆம் என்றுதான் இருக்கும். உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவுமுறையும் சரியான வாழ்க்கை முறையும் மிக அவசியமாகும்.  நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், சரியான உணவுப் பழக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல் எடையை குறைக்க பல வகையான உணவு முறைகள் இருந்தாலும், தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உடனடியாக உதவும் சில சூப்பர்ஃபுட்கள் உள்ளன. 

எடை இழப்புக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து மிகவும் முக்கியம். புரதச்சத்து நிறைந்த உணவுகள் உடலுக்கு நீண்ட நேரம் முழுமையான உணர்வை அளிக்கும். நார்ச்சத்து செரிமான அமைப்பை வலுப்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும், கொழுப்பைக் குறைக்கவும், நீண்ட நேரம் நிறைவாக இருக்கவும் உதவுகிறது. ஜிம், டயட் எதுவும் இல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த உணவுகளை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். 
 
முட்டை: காலை உணவில் முட்டை உட்கொள்வதால், நீண்ட நேரம் உடலுக்கு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் நாள் முழுவதும் நாம் உட்கொள்ளும் கலோரி அளவு குறைகிறது. காலை உணவாக முட்டையை சாப்பிடுபவர்களுக்கு பசி குறைவாக இருப்பதாகவும், அவர்கள் மதிய உணவில் குறைவாக சாப்பிடுவதாகவும் ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன. ஒரு பெரிய முட்டையில் 78 கலோரிகள் மட்டுமே உள்ளது. புரதம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகவும் இது உள்ளது. 

ஓட்ஸ்: காலை உணவில் ஓட்ஸ் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுக்கு நீண்ட நேரம் நிறைவான உணர்வை அளிக்கும். இது பசியைக் குறைக்கவும், உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. ஒரு கப் ஓட்மீலில் 5 கிராம் நார்ச்சத்து, 6 கிராம் புரதச்சத்து மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துகளும் உள்ளன. 

மேலும் படிக்க | கர்ப்ப காலத்தில் வாயு மற்றும் அஜீரண பிரச்சனை ஏன் ஏற்படுகிறது? நிவாரணம் பெற வழி

உலர் பழங்கள்: பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா, முந்திரி போன்ற உலர் பழங்களில் புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. தினமும் ஒரு கையளவு பருப்பு வகைகளை சாப்பிடுவது உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றன. மேலும், இவை இதய ஆரோக்கியத்திற்கும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், உலர் பழங்களில் அதிக கலோரிகள் இருப்பதால், அவற்றை சிறிய அளவிலேயே உட்கொள்ள வேண்டும். 

பருப்பு வகைகள்: பருப்பு வகைகளில் ராஜ்மா, கொண்டைக்கடலை, கருப்பு பீன்ஸ், மசூர் பருப்பு, போன்றவை மிகவும் ஆரோக்க்கியமானவையாக கருதப்படுகின்றன. இவற்றில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. பருப்பு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் எடை குறையத் தொடங்கும் என சில ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

பச்சை காய்கறிகள்: ப்ரோக்கோலி, பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லவை. முளை கட்டிய பயறுகளையும் அடிக்கடி உட்கொள்வது மிக அவசியமாகும். காய்கறிகளிலும் முளைகளிலும் அதிக அளவு நார்ச்சத்து, புரதச்சத்து, மினரல்கள், வைட்மின்கள் ஆகியவை உள்ளன. 

பெர்ரி: ஸ்ட்ராபெர்ரிகள், அவுரிநெல்லிகள், ப்ளாக்பெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரி போன்ற இனிப்பு பெர்ரிகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மெதுவாக்குகிறது. இவற்றை உட்கொல்வதால் நிரம்பிய உணர்வு ஏற்படுகின்றது. இது வைட்டமின் சியின் நல்ல ஆதாரமாகவும் உள்ளது. இவை தவிர பச்சை இலைக் காய்கறிகள், முழு தானியங்கள், அவகேடோ, ஆப்பிள் சைடர் வினிகர் போன்ற உணவுகள் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வேகமாக வெயிட்டை குறைக்கணுமா... இந்த 6 பழங்கள் உதவும்... என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News