Chocolate Meditation: மன அமைதிக்கு தியானம் மிகவும் நல்லது. உங்கள் மனம் அமைதியாக இருக்கும்போது, ​​உங்கள் உடல் ஆரோக்கியமும் மேம்படும். மன அழுத்தத்தை சமாளிக்க தியானம் மிகவும் முக்கியம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தியானம் செய்ய பல வழிகள் உள்ளன. அவற்றில் சாக்லேட் (Chocolate) தியானம் இந்த நாட்களில் மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. சாக்லேட் தியானம் என்றால் என்ன? சாக்லேட்டின் உதவியுடன் எவ்வாறு தியானம் செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம். 


Chocolate Meditation: சாக்லேட் தியானம் என்றால் என்ன?


சாக்லேட் தியானத்தில் (Medidation) தியானிக்க ஒரு துண்டு சாக்லேட் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இதற்கு டார்க் சாக்லேட்டை பயன்படுத்த விரும்புகிறார்கள். ஏனெனில் டார்க் சாக்லேட்டின் சுவை மற்றும் வாசனை மிகவும் வலுவானதாக இருப்பதால், அது தங்களை ஒருமுகப்படுத்த உதவும் என மக்கள் நம்புகிறார்கள். சாக்லேட் தியானத்தின் உதவியுடன், மனமும் உடலும் அமைதியடைந்து நேர்மறையான மாற்றங்கள் உணரப்படுகின்றன என பலர் கூறுகிறார்கள்.


சாக்லேட் தியானம் செய்வது எப்படி


சாக்லேட் தியானம் செய்ய பின்வரும் முறைகள் பின்பற்றப்படுகின்றன.


1. முதலில் உங்களுக்கு பிடித்த டார்க் சாக்லேட்டின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். இது பல அளவுகளில் வருகிறது. உங்களுக்கு ஏற்ற சாக்லேட் அளவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.


2. இதற்குப் பிறகு, ஆழமாக மூச்சு விட்டு, உடலை நிதானப்படுத்த முயற்சி செய்யுங்கள்.


ALSO READ: தியானமே சிறந்த பரிசு - ரசிகர்களுக்கு சமந்தாவின் சிபாரிசு


3. இப்போது உங்கள் கண்களை மெதுவாக மூடி, உங்கள் கையில் இருக்கும் டார்க் சாக்லேட்டின் வாசனையை நுகருங்கள். 


4. சிறிது நேரம் கழித்து, ஒரு சாக்லேட் துண்டை எடுத்து உண்ணவும், அதன் சுவையை நன்கு உணர்ந்து சாப்பிடுங்கள். 


5. சாக்லேட் காரணமாக உங்கள் வாய் மற்றும் உடலில் நிகழும் உணர்திறனை உணருங்கள்.


6. இதே வழியில் சாக்லெட்டின் அந்த முழு பகுதியையும் மெதுவாக சாப்பிடுங்கள்.


7. இதற்குப் பிறகு, சிறிது நேரம் இந்த நிலையில் அப்படியே இருங்கள். ஆழ்ந்த மூச்சு (Deep Breathe) விடுங்கள். 


8. இறுதியாக மெதுவாக கண்களைத் திறக்கவும்.


இப்படி செய்வதன் மூலம் நம் மனம் சாக்லேட்டில் ஒருமுகப்படுவதை  நாம் சில நாட்களில் உணர முடியும். பின்னர் சாக்லேட்டை சார்ந்து இருக்கும் நிலை மாறி, நம் மனம் தானாக தியானத்தில் மூழ்கத் தொடங்கும்.


இங்கே வழங்கப்பட்ட தகவல்கள் எந்தவொரு மருத்துவ ஆலோசனைக்கும் மாற்று கிடையாது. இது கல்வியின் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ: யோகா, தியானம்: தொற்றுக்கான மிகச்சிறந்த துணை சிகிச்சைகள் – உலக வல்லுநர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR