தியானமே சிறந்த பரிசு - ரசிகர்களுக்கு சமந்தாவின் சிபாரிசு

நான் தியானத்தில் அமரும் போது, ஒரு விவரிக்க முடியாத உணர்வு என்னுள் கடந்து செல்கிறது. அது நான் பார்க்கும் விதத்தையே மாற்றுகிறது,  என்னை சிறைப்படுத்தும் உள் எண்ணங்களில் இருந்து விடுவிக்கிறது என்று  நடிகை சமந்தா தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுளார்.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 18, 2021, 01:08 PM IST
  • நான் தியானத்தில் அமரும் போது, ஒரு விவரிக்க முடியாத உணர்வு என்னுள் கடந்து செல்கிறது.
  • அது நான் பார்க்கும் விதத்தையே மாற்றுகிறது, என்னை சிறைப்படுத்தும் உள் எண்ணங்களில் இருந்து விடுவிக்கிறது என்று நடிகை சமந்தா தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுளார்.
  • தியானம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அவரின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
தியானமே சிறந்த பரிசு - ரசிகர்களுக்கு சமந்தாவின் சிபாரிசு

தியானம் தான் உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்ளும் சிறந்த பரிசாக இருக்க முடியும் என்று  நடிகை சமந்தா தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுளார்.

சமந்தாவின் பிஃட்னஸிற்கு கடுமையான உடற்பயிற்சிகள் மட்டுமல்ல, அவரின் யோகா மற்றும் தியான பயிற்சிகளும் காரணமாக இருக்கின்றன.

சமந்தா இவ்வருடம் கோவை ஈஷா (Isha) யோகா மையத்தில் நடைபெற்ற மஹாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார்.

அவ்விழாவில் அவர் தியானம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அவரின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் அதனுடன் ஒரு பதிவையும் பதிந்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது.

ஒவ்வொரு முறையும் நான் தியானத்தில் அமரும் போது, ஒரு விவரிக்க முடியாத உணர்வு என்னுள் கடந்து செல்கிறது. அது நான் பார்க்கும் விதத்தையே மாற்றுகிறது,  என்னை சிறைப்படுத்தும் உள் எண்ணங்களில் இருந்து விடுவிக்கிறது. தியானம் ஒருவித அமைதியையும், நேர்மறையான விஷயங்களையும் என் வாழ்க்கையில் கொண்டுவந்துள்ளது.

இப்போதே உங்களின் தியான பயணத்தை தொடங்குங்கள், நீங்கள் பின்பற்றுவது எந்த முறையானாலும் அல்லது எந்த யோகப் பள்ளியை சார்ந்ததாக இருந்தாலும் சரி. அது தான் உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்ளும் சிறந்த பரிசாக இருக்க முடியும்.

மேலும் அதனுடன் சத்குருவின் தியானம் குறித்த மேற்கோள் ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார்.

தியானம் மனம் கடந்த பரிணாமமாக இருப்பதால், அது ஒன்றே அழுத்தங்களில் இருந்து நம்மை விடுவிக்கும் வழி. எல்லா அழுத்தங்களும், போராட்டங்களும் மனம் சார்ந்தவையே. - சத்குரு.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டும் நபராகவே சமந்தா அறியப்படுகிறார். உடற்பயிற்சி கூடங்களில் பளு தூக்குதல் முதல் ஆரோக்கியத்திற்காக தாவரம் சார்ந்த உணவு முறைகளை மேற்கொள்வது வரை பல்வேறு செயல்களை செய்து வருகிறார்.
 
சமந்தாவை இயக்குனர் குணசேகரின் புராணகால திரைப்படமான சகுந்தலத்தில் கூடிய விரைவில் காணலாம்.

ALSO READ | மதச்சார்பற்ற நாட்டில் அரசு ஏன் கோவிலை நடத்த வேண்டும்: சத்குரு கேள்வி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News