சிறுநீரக புற்றுநோய் உயிரைக்கொல்லும் புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது. இந்த புற்றுநோய் வந்தவர்கள் அதை முதலிலேயே கண்டுபிடித்துவிட்டால், உயிரிழப்பை தவிர்க்கலாம். நமது உடலின் முக்கியமான உறுப்பு, சிறுநீரகம். உடலில் உள்ள அசுத்தமான கழிவுகளை வடிக்கட்டி சுத்தமாக்கும் சிறந்த வேலையை சிறுநீரகம்தான் செய்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுநீரக புற்றுநோய் என்றால் என்ன..?


சிறுநீரக புற்றுநோயை ஆங்கிலத்தில், Kidney cancer எனக்குறிப்பிடுவர். இந்தியாவில் உள்ள டாப் 10 புற்றுநோய்களுள் இதுவும் ஒன்று. இது, பெண்களுக்கு அதிகம் வருவதை விட ஆண்களுக்கு அதிகம் வரும் என ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் 50 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்குத்தான் இந்த நோய் அதிகமாக வருமாம். இந்த புற்றுநோய் மொத்தம் 4 ஸ்டேஜாக உடலுக்குள் பரவுமாம்.  நம் உடலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியினால் சிறுநீரக புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. தொடக்கத்திலேஏ நாம் சிறுநீரக புற்றுநோயை கவனிக்காவிட்டால் இது மற்ற உறுப்புகளுக்கும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.  புகைபிடிக்கும் பழக்கம், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மரபணு போன்றவை சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவதற்கான சில காரணங்களாக உள்ளது. இதில் மொத்தம் நான்கு படிகள் உள்ளன. அவை என்னென்ன? 


மேலும் படிக்க | அழகே உன்னை ஆராதிக்கிறேன்! அழகை ஆராதிக்கும் ’சில’ உணவுப் பொருட்களின் பேஸ்மாஸ்க்


முதல் படி:


சிறுநீரக புற்றுநோயின் முதல் படியில், வயிற்றில் உள்ள புற்றுநோய் கட்டி சின்னதாகத்தான் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 7 செ.மீட்டருக்கும் குறைவாகவே அக்கட்டி இருக்குமாம். இப்படி குறைவான அளவில் இருக்கும் அந்த கட்டி, பிற உறுப்புகளுக்கு பரவாது. சிறுநீரக புற்றுநோயை இந்த படியிலேயே கண்டுப்பிடித்து விட்டால், இதனை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். அப்படி அறுவை சிகிச்சை மேற்கொள்கையில் புற்றுநோய் பரவியுள்ள பகுதியையும் சேர்த்து வெட்டிவிடுவார்கள். இந்த படியில் புற்றுநோயை கண்டறிந்து விட்டால் நோய்க்கு ஆளக்கப்பட்டவர் பிழைக்க 81 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாம். 


இரண்டாம் படி:


சிறுநீரக புற்றுநோயின் இரண்டாம் படியில் கேன்சரை உண்டாக்கிய கட்டி 7 செ.மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். இதை அறுவை சிகிச்சை செய்து அகற்றலாம். ஆனால், அக்கட்டியின் அளவையும் அது எங்கிருக்கிறது என்பதையும் பொறுத்துதான் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள். இந்த படியில் உள்ளவர்கள் சராசரி 5 வருடங்கள் உயிருடன் இருப்பது 74 சதவிகிதம் உறுதி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


மூன்றாம் படி:


சிறுநீரக புற்றுநோயின் மூன்றாவது படியில் வயிற்றில் உள்ள கட்டி பரவி பிற பாகங்களுக்கும் சென்று விடும். இதனால், பிற பாகங்களுக்கும் சிறுநீரக புற்றுநோய் பரவிவிடும். இந்த படியில் உள்ளவர்கள் 5 வருடம் உயிர்வாழ்வது சராசரியாக 53 சதவிகிதம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இவர்கள், அதற்கு அறுவை சிகிச்சைகள், ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி உள்ளிடவற்றை பின்பற்ற வேண்டும், 


நான்காம் படி:


சிறுநீரக புற்றுநோயின் நான்காம் படி மிகவும் கொடியது என நோயாளிகலாலும் மருத்துவர்களாலும் கூறப்படுகிறது. இந்த படியில், கிட்டத்தட்ட புற்றுநோய் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திற்கும் பரவிவிடும். இந்த படியில் உள்ளவர்கள் அறுவை சிகிச்சை, ரேடியேஷன் தெரபி, இம்யூனோ தெரபி போன்ற அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். இந்த படியில் உள்ளவர்கள் உயிர் பிழைப்பது 8 சதவிகிதம்தான் என கூறுகின்றனர் மருத்துவர்கள். 


மேலும் படிக்க | கோதுமை வேண்டாம்... ‘இந்த’ சப்பாத்திகளுக்கு மாறுங்க... வெயிட் தானா குறையும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ