Face Beauty Tips With Food Items: உடலின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியமானது. அதிலும், அழகிற்கு அழகு சேர்க்கும் சிலவற்றை உணவாக மட்டும் இன்றி, அழகுப் பொருளாகவும் பயன்படுத்தலாம்
உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும் உணவுப் பொருட்கள், சருமத்தை அதிக பளபளப்பாக பராமரிக்கும். அவற்றில் சிலவற்றை உணவாக உண்டாலும், சிலவற்றை சருமத்தில் மேற்பூச்சாக பூசினால், சருமம் பளபளவென மின்னும்.
புத்துணர்ச்சியூட்டும் சரும பளபளப்பிற்கு, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ்பேக்குகளே போதுமே?
கோடையின் வெப்பம் அதிகமாக இருப்பதால், நம் சருமத்தை கவனித்துக்கொள்வது அவசியம். வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் கலவையானது அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி, அடைபட்ட துளைகள் மற்றும் ஒட்டுமொத்த மந்தமான நிறத்திற்கு வழிவகுக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்த கோடைகால தோல் பிரச்சனைகளை எதிர்த்துப் போராட இயற்கையான மற்றும் செலவு குறைந்த தீர்வு உள்ளது
முக அழகை மேம்படுத்தும் பேஸ்பேக் பலவிதங்களில் தயாரிக்கலாம்
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பப்பாளி மற்றும் தேன் இரண்டும் சேர்ந்தால்? இரண்டையும் கலந்து மாஸ்க் போட்டால், சருமம் கண்ணாடியாய் ஜொலிக்கும்
தயிர் - மஞ்சள் மாஸ்க், சருமத்தின் பொலிவை மேலும் அதிகரிக்கும்
ஓட்ஸையும் பேஸ்பேக்காக பயன்படுத்தலாம். இந்த பேக், அழகை அதிகரிக்கும், வயதை குறைத்துக் காட்டும்
வாழைப்பழங்கள் வறண்ட சருமத்திற்கு சிறந்த பேஸ்பேக்காக இருக்கும். வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி-6 மற்றும் பொட்டாசியம், தோல் வறட்சியை போக்குகின்றன