பப்பாளியை இந்த நேரத்தில் சாப்பிட்டால் விரைவாக உடல் எடை குறைவதுடன் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்
Health Tips: பப்பாளியை சரியான நேரத்தில் உட்கொள்வதன் மூலம் இதிலிருந்து அதிகப்படியான நன்மைகளை பெற முடியும்.
Health Tips: நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் காய்களுக்கும் பழங்களுக்கும் எப்போதுமே ஒரு முக்கிய இடத்தை அளிக்க வேண்டும். இவற்றால் நமக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதுடன் இவை நம்மை பல வித நோய்களிலிருந்தும் காக்கின்றன. இனிப்புக்கு பெயர் பெற்ற பப்பாளி ஒரு சுவையான பழம் மட்டுமல்ல, செரிமான நன்மைகளும் இதில் அதிகம் உள்ளன. பழங்களை எடுத்துக்கொண்டால், இவற்றை நாம் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆரொக்கியமற்ற ஸ்னாக்ஸ்களுக்கு பதிலாக பழங்களை உட்கொள்வது நல்லது என சுகாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
பழங்களில் பலருக்கு பிடித்த பழங்களில் ஒன்று பப்பாளிப்பழம் (Papaya). இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. எனினும் இதை சரியான நேரத்தில் உட்கொள்வதன் மூலம் இதிலிருந்து அதிகப்படியான நன்மைகளை பெற முடியும். இதை சரியான நேரத்தில் உட்கொள்வது அதன் செரிமான பண்புகளை மேம்படுத்துவதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கும். இந்த பழத்தின் செரிமான பண்புகளை அதிகம் பயன்படுத்த இதை எப்போது உட்கொள்ள வேண்டும்? பப்பாளி சாப்பிட ஏற்ற நேரம் எது? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அதிக நன்மைகளை பெற பப்பாளி உட்கொள்வதற்கான சரியான நேரம் எது? (What is the Best Time To Eat Papaya?)
உங்கள் நாளை நல்ல முறையில் துவக்க பப்பாளியை காலை உணவில் எட்கொள்ளலாம்
காலை உணவில் பப்பாளியைச் சேர்த்து உங்கள் நாளை நல்ல முறையில் தொடங்கலாம். பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்கள் செரிமான (Digestion) அமைப்பு அனைத்து ஊட்டச்சத்துக்களையும் திறம்பட உறிஞ்சுவதை உறுதி செய்கிறது. பப்பாளியில் உள்ள பப்பேன் போன்ற நொதிகள் புரதங்களை உடைக்கவும், செரிமான செயல்முறையை எளிதாக்கவும், வீக்கத்தைத் தடுக்கவும் உதவுகின்றன.
நண்பகல் சிற்றுண்டி: செரிமான தீயை அதிகரிக்கும்
மதியம் பசித்தவுடன் பப்பாளியை உட்கொள்ளலாம். இதில் உள்ள அதிக நார்ச்சத்து சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும் இது மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. பப்பாளியில் உள்ள இயற்கையான சர்க்கரைகள், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்காமல் விரைவான ஆற்றலை ஊக்குவிப்பதோடு, நீடித்த உயிர்ச்சக்திக்கு இது ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது.
மதிய உணவுக்கு முன் அபிடைசராக செயல்படும்: செரிமானத்திற்கு உடலை தயார் செய்யும்
மதிய உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் பப்பாளியை உட்கொள்வது சிறந்த செரிமானத்திற்கான அடித்தளத்தை அமைக்கும். பப்பாளியில் உள்ள என்சைம்கள் இயற்கையாகவே செரிமானத்திற்கு உதவும் பண்புகளைக் கொண்டுள்ளன. சிக்கலான உணவுகளை உங்கள் உடல் மிகவும் திறமையாக உடைக்க இது உதவுகிறது. உங்கள் மதிய உணவில் நீங்கள் அதிகமாக அல்லது கனமான உணவுகளை உட்கொண்டால், பப்பாளி குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை வலுவாக்க... டயட்டில் சேர்க்க வேண்டிய சில உணவுகள்!
உணவுக்குப் பின்:
உங்கள் முக்கிய உணவுக்குப் பிறகு பப்பாளியை ஒரு டெசர்டாக, அதாவது இனிப்பு சுவைக்கு சாப்பிடலாம். அதன் இயற்கையான இனிப்பு சுவை உங்கள் இனிப்புக்கான ஏக்கத்தை பூர்த்தி செய்வதோடு செரிமானத்திற்கும் உதவும். பப்பாளியில் உள்ள நார்ச்சத்து, செரிமானப் பாதையில் எஞ்சியிருக்கும் உணவுத் துகள்களை வெளியேற்றி, ஆரோக்கியமான குடல் சூழலை மேம்படுத்த உதவுகிறது.
மாலை சிற்றுண்டி: லைட்டான தேர்வு
பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களுக்குப் பதிலாக, உங்கள் மாலை நேர சிற்றுண்டியாக ஒரு கிண்ணம் ஃப்ரெஷ்ஷாக நறுக்கிய பப்பாளியை சாப்பிடலாம். அதன் புத்துணர்ச்சியூட்டும் தன்மை ஆரோக்கியமான விருப்பத்தைத் தேடுபவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. பப்பாளியில் உள்ள நீர் உள்ளடக்கம் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது.
உடல் எடையை குறைக்க பப்பாளி (Papaya For Weight Loss)
பப்பாளி குறைந்த கலோரி பழமாகும். இதில் அதிக தண்ணீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது. விரைவில் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பப்பாளியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பப்பாளி பழங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு அதிக சத்தும் இதில் உள்ளது. ஒருவர் தனது அதிகரித்து வரும் எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால், தினமும் பப்பாளியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் ஆரோக்கியத்தில் மாயம் செய்யும் பெருங்காயம்.... வியக்க வைக்கும் நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ