நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. அதனால் பல பிரச்சனைகள் எழுகின்றன. ஆனால் உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் உங்கள் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம்.
நரம்பு மண்டலத்தை இயற்கையான முறையில் வலிமையாக்க எந்தெந்த உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்
நம் உடலை கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலம் பலவீனமடைந்தால், அனைத்து விதமான உடல் நல பிரச்சனைகளும் ஏற்படும். நாம் அனைவரும் அலுவலக வேலை, நண்பர்கள், திருமணம், குடும்ப விஷயங்கள் மற்றும் பிற விஷயங்களில் மிகவும் பிஸியாக இருப்பதால், நமது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள மறந்து விடுகிறோம். இது மைகவும் தவறு. உணவு பழக்கம் சரியாக இருந்தால், அனைத்தும் சரியாக இருக்கும்.
மோசமான உணவு பழக்கத்தினால் நம் நரம்பு மண்டலம் பலவீனமடைகின்றன. நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. அதனால் பல பிரச்சனைகள் எழுகின்றன. ஆனால் உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் உங்கள் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம்.
உலர் பழங்கள் நரம்பு மண்டத்தை வலுவாக்கும் திறன் கொண்டவை. உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் உடலின் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து. நரம்பு பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமின்றி, அனைவரும் பாதாம், முந்திரி, வாதுமை பருப்புகள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பச்சை காய்கறிகளில் வைட்டமின் பி, சி, ஈ, மெக்னீசியம், தாமிரம், ஃபோலேட் மற்றும் கால்சியம் ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன இது உங்கள் நரம்புகளின் பலவீனத்தை நீக்குகிறது. அவற்றை உங்கள் உணவின் சேர்த்து கொள்வது நரம்பு பிரச்சனைகளில் இருந்து உங்களைக் காக்கும்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நரம்புகளுக்கு பலம் தரும். மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அதனால் தான் மீன்களை உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.