பழுப்பு முட்டை Vs வெள்ளை முட்டை! இரண்டில் எது சிறந்தது!
முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது, இது ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் சத்துக்களை அள்ளிக் கொடுக்கின்றன.
தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது, இது ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் சத்துக்களை அள்ளிக் கொடுக்கின்றன. புரதங்களுடன், கால்சியம் மற்றும் வைட்டமின்களும் முட்டையில் உள்ளன. கால்சியம் எலும்புகளை வலுப்படுத்த வேலை செய்கிறது. 50 கிராம் சாதாரண முட்டையில் சுமார் 78 கலோரிகள் காணப்படுகின்றன. ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் உள்ளது, அதே சமயம் 0.3 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 4.7 கிராம் கொழுப்பு உள்ளது. முட்டையில் 0.8mg இரும்பு சத்து, 0.6mg துத்தநாகம், 23.5mg ஃபோலேட், 15.4mg செலினியம், 147mg கோலின், 0.4 மைக்ரோகிராம் வைட்டமின் B12 மற்றும் 80 மைக்ரோகிராம் வைட்டமின் A உள்ளது. இவை அனைத்தும் ஒரு சாதாரண முட்டையில் காணப்படுகின்றன. முட்டையின் எடை மற்றும் கோழி இனத்தைப் பொறுத்து வேறுபாடு இருக்கலாம்.
பழுப்பு மற்றும் வெள்ளை முட்டை
அனைத்து வகையான முட்டைகளும் ஆரோக்கியத்திற்கு நல்லது. சந்தையில் இரண்டு நிறங்களில் (பழுப்பு மற்றும் வெள்ளை முட்டை) முட்டைகள் காணப்படுகின்றன. இந்த இரண்டு நிற முட்டைகளில் எது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பொதுவாக, வெள்ளை முட்டைகளை விட, பழுப்பு நிற முட்டைகள் அதிக நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, ஆனால் இது விஞ்ஞானிகளின் பல ஆராய்ச்சிகளில் உறுதிப்படுத்தப்படவில்லை. உண்மையில், முட்டையின் நிறத்திற்கும் (பழுப்பு மற்றும் வெள்ளை முட்டை) அதிலுள்ள சத்துக்களின் அளவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். முட்டையின் நிறம் கோழியின் இனம் மற்றும் அது உற்பத்தி செய்யும் நிறமிகளைப் பொறுத்தது என அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | முதலில் கோழி வந்ததா... இல்லை முட்டை வந்ததா... விடையை கண்டுபடித்த விஞ்ஞானிகள்!
பழுப்பு மற்றும் வெள்ளை முட்டைகளுக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை
வெள்ளை மற்றும் பழுப்பு நிற முட்டைகளுக்கு (Egg) இடையே உள்ள வேறுபாடு நிறம் மட்டுமே. அதன் ஓட்டில் நிற வேறுபாடு உள்ளது, இது தவிர முட்டையின் ஊட்டச்சத்து மற்றும் தரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. பழுப்பு நிற முட்டைகள் அதிக விலை காரணமாக அதிக சத்தானவை என்று பலர் கருதுகின்றனர். ஆனால் இது அவ்வாறு இல்லை. இந்த இரண்டு முட்டைகளும் ஒரே மாதிரியானவை, இருப்பினும் கோழியின் இனத்திற்கும் அதன் வளர்ப்பிற்கும் ஏற்ப முட்டைகளின் தரத்தில் வேறுபாடு இருக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | முட்டையை ‘இப்படி’ சாப்பிட்டால் போதும்... ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு நீங்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ