Sugar Control: ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த சூப்பர் டெக்னிக்! ஜாமூன் இலை மந்திரம்
Leaves For Blood Sugar Control: இரவில் ஜாமூன் இலை செய்யும் மாயம்! ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க சுலபமான வழி இதுதான்
உயர் இரத்த சர்க்கரை அளவு, நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் குளுக்கோஸின் அதிகப்படியான சுரப்பு ஆகும், மீளமுடியாத சுகாதார நிலை என்று அறியப்படும் இந்த நோய், வேறு பல நோய்களுக்கு மூலக்காரணமாக இருக்கிறது. நாம் உண்ணும் உணவுகள் செரிமாணம் ஆன பிறகு உடலில் இந்த குளுக்கோஸ் உருவாகிறது. நமது கணையம் இன்சுலின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது, அந்த இன்சுலின் தான் குளுக்கோஸை ஆற்றலாக மாற்றுகிறது, குளுக்கோஸ் தான் உடல் சாதாரணமாக செயல்படத் தேவைப்படுகிறது.
இன்சுலின் சுரப்பு
உயர் இரத்த சர்க்கரை அளவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற தேவையான இன்சுலினை போதுமான அளவில் கணையம் உற்பத்தி செய்யாது. இது, இரத்தத்தில் அதிகப்படியான குளுக்கோஸ் தேங்க வழிவகுத்து, உடலின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
உயர் இரத்த சர்க்கரை பிரச்சனை என்பது மரபணு மாற்றப்பட்ட நோய் அல்லது சுகாதார நிலை மட்டுமா? தவறான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், உணவுமுறை உட்பட பல காரணங்களால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது .
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் என்னவாகும்?
இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமாக இருப்பதால் ஏற்படும் ஹைப்பர் கிளைசீமியா, உடலில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். காலப்போக்கில், இது இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும், இது போன்ற கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
சர்க்கரையை கட்டுப்படுத்த வீட்டு வைத்தியம்
உயர் இரத்த சர்க்கரை பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு பல்வேறு வீட்டு வைத்தியம் பரிந்துரைக்கப்படுகிறது. அதில் ஒன்று தான் ஜாமூன் எனப்படும் நாவல் பழம். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவர கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
நாவல் பழம் எனப்படும் ஜாமூன் பழத்தில் இயற்கையிலேயே துவர்ப்புச் சுவை மிகுந்து காணப்படுகிறது. நாவல் பழதின், பழம், விதை, இலை மற்றும் மரப்பட்டை என அனைத்து பாகங்களும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
மேலும் படிக்க | வெளுத்துக்கட்டும் வெந்தயம்.. பல பிரச்சனைகளின் ஒரே தீர்வு
நாவல் பழத்தின் ஊட்டச்சத்துக்கள்
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. நாவல்பழத்தின் இலையிலும் இரத்த சர்க்கையை குறைக்கும் பண்பு உள்ளது.
நாவல்பழம் சீர்செய்யும் நோய்கள்
சர்க்கரையை குறைக்கும் நாவல்பழமும், அதன் இலையும், குமட்டல், எச்சில் அதிகமாக ஊறுதல், வயிற்றுப்புண்ணால் ஏற்படும் வாந்தி போன்றவற்றுக்கு மருந்தாகிறது. நாவல் பழ இலை, உடலுக்கு உற்சாகம் அளிப்பது.
சிலர் சீக்கிரமாகவே சோர்வடைந்துவிடுவார்கள். அவர்கள் சிறிய வகை நாவல் பழத்தை உட்கொண்டால் சுறுசுறுப்பாக அதிக ஆற்றலோடு பணியாற்ற முடியும். தோலில் அதிகமாக எரிச்சல் உள்ளவர்கள் கறுப்பு நாவல் பழம் உண்ணலாம். பெரிய நாவல் பழமானது வயிற்றுப்போக்கு, சர்க்கரை நோய், தோல் எரிச்சல் மூன்றுக்குமே மருந்தாகப் பயன்படுகிறது.
ஆயுர்வேதத்தில் நாவல் மரத்தின் மகத்துவம்
ஆயுர்வேதத்தில், நாவல் மரத்தின் இலைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய ஆய்வின்படி, கருப்பு பிளம் என்று அழைக்கப்படும் நாவல் பழத்தின் இலைகளை மென்று சாப்பிடுவது உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நாவல் மரத்தின் இலைகள்
நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை அளவு குறையும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும். அதிலும், இரவில் தூங்குவதற்கு முன்னதாக இந்த இலையை மென்று உண்பது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
ஜாமுன் இலைகள் உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று சொன்னால், அது எப்படி நடக்கிறது என்பதையும் தெரிந்துக் கொள்ளவேண்டும். இதில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் பல சேர்மங்கள் உள்ளன.
மேலும் படிக்க | நீரிழிவை ஒழித்துக் கட்ட... வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ‘6’ பானங்கள்!
எலாஜிக் அமிலம்
எலாஜிக் அமிலம் எனப்படும் பாலிஃபீனால் நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் உதவும்.
குவெர்செடின்
நீரிழிவு எதிர்ப்பு குணங்களைக் கொண்ட மற்றொரு பாலிபினால் குர்செடின் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம் மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம்.
மைரிசெட்டின்
மைரிசெட்டின் எனப்படும் ஃபிளாவனாய்டு நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் உதவும்.
உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஜாமூன் இலையை பல வழிகளில் உட்கொள்ளலாம். ஆனால், இரவில் உறங்கச் முன் 30 நிமிடங்களுக்கு முன் இலைகளை மென்று சாப்பிடுவது மிகவும் பொதுவான ஒன்றாகும்.அதேபோல, ஜாமுன் இலை தேநீர் தயாரித்து பருகலாம். இந்த அற்புதமான பானத்தை தயாரிக்க, ஒரு பிடி ஜாமூன் இலைகளை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதில், சுவைக்கு தேன் அல்லது எலுமிச்சை சேர்க்கலாம். ஜாமுன் இலைகளை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். தயிர், மியூஸ்லி அல்லது ஸ்மூத்திகளில் நாவல் பழ இலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ