நீரிழிவு நோயாளிகளுக்கு நாவல் பழத்தின் நன்மைகள்: உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் தோடர்ந்து நீரிழிவு நோயை வேரிலிருந்து அகற்றுவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறார்கள். இருப்பினும் இதற்கு இன்னும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. எனினும், ஆரோக்கியமான பொருட்களை தவறாமல் சாப்பிட்டு, அதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க முடியும். பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நாவல் பழம் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சூப்பர் ஃபுட்டாக உதவுகிறது. இதில் ஜம்போலின் என்ற கலவை உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் மற்றும் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும்.
நாவல் பழத்தை உட்கொள்வதற்கான 5 வழிகள்
நார்ச்சத்து, புரதம், கால்சியம், ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகள், பொட்டாசியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நாவல் பழத்தில் உள்ளதாக இந்தியாவின் பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் தெரிவிக்கிறார். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க நாவல் பழத்தை எப்படி சாப்பிடுவது என்று பார்க்கலாம்.
1. நாவல் பழ சாலட்
பழ சாலட் சாப்பிட விரும்புபவர்கள் நாவல் பழ சாலட்டை உட்கொள்ளலாம். எந்த சாலட் செய்தாலும், அதில் நாவல் பழங்களை வெட்டி கலக்கி அதை உட்கொள்ளலாம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வைப்பது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
2. நாவல் பழ ஃபிஸ்
ஃபிஸ் செய்து நாவல் பழத்தை உட்கொள்வது மிகவும் ஸ்டைலான வழியாக கருதப்படுகின்றது. இதற்கு, முதலில் எலுமிச்சை சோடாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் நாவல் பழங்களின் கூழை கலக்கவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு, ஒரு கிளாஸில் பரிமாறவும்.
மேலும் படிக்க | கண்ணுக்கு நல்லதுன்னு Vitamin A கண்டபடி சாப்பிடாதீங்க.. பேராபத்து!
3. நாவல் பழ அல்வா
நாவல் பழ அல்வா தயார் செய்ய, முதலில் இந்த பழத்தின் கூழ் எடுத்து, அதில் தேங்காய் பால், தேன் மற்றும் சியா விதைகளை கலக்கவும். இது மிகவும் சுவையாக இருப்பதோடு ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும்.
4. நாவல் பழ ஜூஸ்
நாவல் பழ ஜூஸ் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை செய்ய இந்த பழத்தின் கூழ் எடுத்து, அதிலிருந்து விதைகளை அகற்றவும். இப்போது இதனுடன் கருப்பு உப்பு மற்றும் தேன் கலந்து குடிக்கவும்.
5. நேரடியாக சாப்பிடுங்கள்
நாவல் பழங்களை அப்படியே சாப்பிடலாம். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும், மேலும் அதிகரிக்கும் எடையை கட்டுப்படுத்தவும் இது உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ