கால்சியம் அதிகமாக இருக்கும் உணவாக இருந்தாலும் எப்போ எப்படி சாப்பிட்டா பலன் கிடைக்கும்?
Right Time To Take Calcium: கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளாக இருந்தாலும், அதன் முழுப்பலனும் கிடைக்க எப்போது உண்ண வேண்டும் தெரியுமா? சுண்ணாம்புச்சத்தின் முழுப்பலனையும் பெற சிறந்த நேரம் இதுதான்...
Calcium Eating Good Time : நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கியமான கனிமங்களில் ஒன்று கால்சியம். எலும்புகளை வலுவாக பராமரிக்கவும் உடலின் சரியான செயல்பாட்டிற்கும் சுண்ணாம்புச்சத்து அவசியம். உடலின் அடிப்படை உருவத்திற்கு காரணமான எலும்புக்கூடு மற்றும் பற்களுக்கும் அடிப்படை ஆதாரம் கால்சியம். உடலுக்குத் தேவையான கால்சியம் உட்கொள்ளல், எலும்புகள் வலுவாக இருக்கும். ஆனால் கால்சியம் குறைபாடு, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
நமக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறதா என்பது பொதுவாக யாருக்கும் தெரிவதில்லை. அதிலும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கால்சியம் குறைபாடு அதிகமாக ஏற்படுகிறது. உணவாக இருந்தாலும் சரி, கால்சியம் சப்ளிமெண்டாக இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளும் நேரம் என்பது முக்கியமானது.
கால்சியம் மாத்திரை
அதிலும் நீங்கள் எவ்வளவு கால்சியம் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் அதை உடல் கிரகிப்பது நிர்ணயமாகிறது. 500 மிகி அளவிலான கால்சியம் மாத்திரையை ஒருவர் எடுத்துக் கொள்பவராக இருந்தால், அதை தினசரி இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. காலை உணவு மற்றும் இரவு உணவிற்கு பிறகு கால்சியம் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்பவர்கள் என்றால், பயிற்சிக்கு முன் அல்லது பின் கால்சியம் மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக கால்சியம் மாத்திரையை வாய்வழியாக எடுத்துக் கொள்வது நல்ல பலனையும் கொடுக்கும். தினசரி பால் குடிப்பது போதுமான கால்சியத்தைக் கொடுக்கும்.
கால்சியம் குறைபாட்டிற்கான காரணங்கள்
கால்சியம் குறைபாடு எனப்படும் ஹைபோகால்சீமியா என்பது, பல்வேறு சுகாதார நிலைமைகள் மற்றும் கோளாறுகளால் ஏற்படலாம். கால்சியம் குறைபாட்டிற்கான காரணங்களை தெரிந்துக் கொள்வோம்.
ஹைப்போபராதைராய்டிசம்: ஒருவரின் உடல், பாராதைராய்டு ஹார்மோன், ஹார்மோனை போதுமான அளவு உற்பத்தி செய்யாவிட்டால் இரத்தத்தில் கால்சியம் அளவு குறைந்துவிடும். பரம்பரை பிரச்சனை அல்லது பாராதைராய்டு அல்லது தைராய்டு சுரப்பிகள் அகற்றப்பட்டவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.
வைட்டமின் டி குறைபாடு: உடலில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால், அது இரத்தத்தில் உள்ள கால்சியத்தைக் குறைக்கும். நமது உடல் கால்சியத்தை சரியாக உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி உதவுகிறது. சூரிய ஒளியில் செல்லாதது அல்லது புவியியல் ரீதியாக வெயில் குறைவாக இருக்கும் இடத்தில் வாழ்வது போன்ற காரணத்தால், ஒருவரின் உடலில் வைட்டமின் D உற்பத்தி குறையலாம்.
மேலும் படிக்க | எலும்பு முறிவுக்கு காரணமாகும் ஹைபர்கால்சீமியா! இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை
சிறுநீரக செயலிழப்பு: நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்பது, இரத்தத்தில் பாஸ்பரஸின் அளவை அதிகரித்து, ஹைபோகால்சீமியா ஏற்பட வழிவகுக்கிறது.
மருந்துகளின் பக்கவிளைவு: பிஸ்பாஸ்போனேட்ஸ், கார்டிகோஸ்டீராய்டுகள், ரிஃபாம்பின், கால்சிட்டோனின் மற்றும் பிற மருந்துகள் ஹைபோகால்சீமியா ஏற்பட காரணமாகிறது.
கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் ஏற்படும் பாதிப்புகள்
கால்சியம் குறைபாடு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இது எலும்பு ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் இரண்டையும் பாதிக்கும்.
எலும்பு முறிவு, ஆஸ்டியோபோரோசிஸ்.
குழந்தைகளுக்கு ஏற்படும் ரிக்கெட்ஸ்
எலும்புகளை மென்மையாக்கும் ஆஸ்டியோமலாசியா
எனவே, பச்சை காய்கறிகள், உலர் பழங்கள், வாழைப்பழம், முட்டை, எள் என கால்சியம் உள்ள உணவுகளை தினசரி அடிப்படையில் எடுத்துக் கொள்ளவேண்டும். ஹைபர்கால்சீமியா போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், உணவு உட்கொள்வதில் மருத்துவர்களின் பரிந்துரையை பின்பற்றுங்கள்.
மேலும் படிக்க | உடலுறவால் ஏற்படும் பல நன்மைகள்! என்னென்ன தெரியுமா? இங்க தெரிஞ்சிக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ