ஆதிகால மனிதனாக இருந்தாலும் சரி, நிகழ்கால டிஜிட்டல் மனிதனாக இருந்தாலும் சரி, எல்லா காலத்திலும் எப்படி சாப்பிடுவதற்கு உணவு தேவைப்படுகிறதோ, அதே போல இயல்பாக வாழ்வதற்கும் சில உணர்ச்சிகள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட உணர்ச்சிகளுள் ஒன்றுதான், காமம். பசி, தூக்கம், சோகம், மகிழ்ச்சி போல இதுவும், வயது வந்த பின்பு வரும் சாதாரண உணர்வுதான் என்கின்றனர் மருத்துவர்கள்.
உடலுறவு கொள்வது, மனிதன் இனப்பெருக்கம் செய்வதற்கு மட்டுமல்ல, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இதனால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அவை என்னென்ன நன்மைகள் என்பதை இங்கு பார்ப்போமா?
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்!
உடலுறவு குறித்து தெரிவிக்கும் கைதேர்ந்த மருத்துவர்கள், ஆக்டிவான செக்ஸ் வாழ்க்கை கொண்டிருப்போர் எப்போதாவதுதான் நோய்வாய் படுவதாக கூறுகின்றனர். ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை கொண்டுள்ளவர்களின் உடல், நோய் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளை எதிர்த்து போராட தயார் நிலையில் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு காரணம், உடலுறவு அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் ஹார்மோன்களை தூண்டுவதாகவும் இதனால் அவர்கள் தேவையான உணவு, தூக்கம் அனைத்தையும் சரியான அளவில் எடுத்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதுவே அவர்களுக்கு நல்ல நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கவும் உதவுகிறதாம்.
லிபிடோவை வலுப்படுத்துகிறது:
உடலுறவு கொள்வதற்கு முக்கியமான பாகங்களுள் ஒன்றாக இருப்பது லிபிடோ. இது குறித்து கூறும் மகப்பேறு மருத்துவர்கள், ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை, ஒரு பெண்ணிற்கு இருந்தால் அது பிறப்பிறுப்பில் இருக்கும் லிபிடோ எனும் இடத்திற்கு அதிக ரத்த ஓட்டத்தை அனுப்புவதாகவும் இதனால் நீண்ட நேரம் இன்பமான உடலுறவை கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர்.
ரத்த அழுத்ததை குறைக்கும்:
ஆரோக்கியமான உடலுறவு குறித்து நடத்தப்பட்ட மருத்துவ ஆராய்ச்சியில், உடலுறவினால் ரத்த அழுத்தம் குறையும் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உடலுறவு நடக்கையில், உடலில் ஏற்படும் மாற்றங்களினால் இது நிகழ்வதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
உடற்பயிற்சியாகவும் எடுத்து கொள்ளலாம்..
ஆரோக்கியமான உடலுறவு, நல்ல உடற்பயிற்சியாகவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கார்டியோ, தீவிர உடற்பயிற்சி அளவிற்கு இல்லை என்றாலும் இதன் மூலம் கலோரிகள் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் உடலுறவு வைத்துக்கொண்டால், அதிலிருந்து 5 கலோரிகள் வரை குறைவதாக கூறப்படுகிறது. பாலியல் உறவு கொள்ளும் போது, பல்வேறு உடல் தசைகள் செயல்படுகின்றன. அது மட்டுமன்றி, இதனால் இருதய துடிப்பும் அதிகரிக்கிறது. எனவே, இதனை பலர் உடற்பயிற்சியாகவும் கருதுகின்றனர்.
மேலும் படிக்க | படுக்கையறை வாழ்க்கை சலித்து விட்டதா? அதை புதுப்பிப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க!
நல்ல தூக்கம்:
உடலுறவு, நல்ல தூக்கத்திற்கும் உதவுவதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடலுறவின் உச்சமடைகையில் ப்ரோலாக்டின் என்ற ஹார்மோன் வெளியேறுகிறது. இதனால் உடல் நிதானம் அடைந்து, தூக்க நிலைக்கு செல்லுமாம். நல்ல பாலியல் சுகத்திற்கு பிறகு பலர் அடித்து போட்டது போல தூங்குவதும் இதனால்தான் என்கின்றனர் மருத்துவர்கள்.
மன அழுத்தத்தை போக்கும்:
உங்கள் பார்ட்னருடன் நெருக்கமாக இருக்கையில் சாதாரணமாகவே மன அழுத்தம் குறைந்து போகும். அதுவே உடலுறவு கொள்கையிலும் ஃபீல் குட் ஹார்மோன்கள் வெளியேறி உங்கள் மன அழுத்தத்தை நீக்க உதவும் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, உடலுறவும் நெருக்கமும் உங்களுக்கு மனம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் அதை சரி செய்யவும் உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ