உடல் எடையை குறைக்கும் டிப்ஸ்: உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு.
20 வயது கல்லூரி செல்லும் பெண்ணாக இருந்தாலும் சரி, 40 வயது இல்லத்தரசியாக இருந்தாலும் சரி, ஸ்லிம் மற்றும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் தங்கள் உடலை ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் வைத்துக்கொள்ள பலரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்வதுடன் பலர் தங்கள் எடையை சீராக வைத்துக்கொள்ள கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளையும் மேற்கொள்கின்றனர்.
இவை அனைத்தையும் செய்தாலும், பலரால் உடல் எடையை இழக்க முடிவதில்லை. எனினும் சில இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பல வித முயற்சிகள் செய்தும் உங்களால் அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்றால், இன்றிலிருந்தே சில மாற்றங்களை உங்கள் அன்றாட வாழ்க்கையில் செய்து பாருங்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த ஐந்து விஷயங்களைச் செய்யுங்கள். இதன் பிறகு உடலிக் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பு கண்டிப்பாக கரையத் தொடங்கும்.
இந்த ஐந்து விஷயங்களை தினமும் காலையில் செய்யுங்கள்
1. வெதுவெதுப்பான நீர்
காலையில் எழுந்தவுடன் முதலில் வெதுவெதுப்பான நீரை அருந்த வேண்டும். உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதில் சூடான நீர் பெரும் பங்காற்றுகிறது. இது உங்கள் கொழுப்பைக் கரைப்பது மட்டுமல்லாமல், உங்கள் வயிற்றை சுத்தமாக வைத்திருப்பதோடு உங்கள் முகத்தையும் பிரகாசமாக்குகிறது.
மேலும் படிக்க | பெண்கள் ஹீமோகுளோபின் குறைபாட்டை எவ்வாறு சமாளிப்பது?
2. சீக்கிரம் எழுந்து நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்யவும்
இரவில் தாமதமாகத் தூங்குவதும், காலை 12 மணி வரை படுக்கையில் இருப்பதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு எதிரிகளாகும். நீங்கள் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க விரும்பினால், இரவு 10 மணிக்கு முன் தூங்கி, காலை 5 முதல் 6 மணிக்குள் எழுந்திருங்கள். வெகுநேரம் வரை தூங்குவதும், காலை உணவை உட்கொள்ளாமல் இருப்பதும் உடல் எடை அதிகரிக்க பெரும் காரணங்களாகின்றன.
காலையில் சரியான நேரத்தில் எழுந்திருப்பதால், உங்களுக்காக உங்களால் சில நேரம் செலவழிக்க முடியும். காலையில் எழுந்து யோகா அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். இதை செய்ய முடியவில்லை என்றால் அருகில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். பிறகு ஒவ்வொரு வாரமாக நீங்கள் நடக்கும் தூரத்தை அதிகரித்துக் கொண்டே இருங்கள்.
3. காலை சூரிய ஒளி
காலை வேளை சூரிய ஒளி நம் உடலுக்கு மிக நல்லது என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். காலையில் சூரிய ஒளி நம் உடல் மீது பட்டால் உடலில் வைட்டமின் டி, செரோடோனின் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலில் செரிமான செயல்முறை வேகமாகிறது. இதனால் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
4. காலை உணவு அவசியம்
இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. இது உடல் எடையில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதேபோல, ஆரோக்கியமாக இருப்பதற்கு காலை உணவு மிகவும் அவசியம். நீங்கள் காலை உணவில் பருவகால பழங்களுடன் முளைகள் மற்றும் பழச்சாறுகளை சேர்க்க வேண்டும்.
5. தேநீரை தவிர்ப்பது நல்லது
நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், முதலில் டீ-காபிக்கு பை சொல்லுங்கள். மற்றும் உங்கள் உணவில் கிரீன் டீ மற்றும் கருப்பு காபியை சேர்த்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் போது க்ரீன் டீ, ப்ளாக் காபி போன்றவற்றையும் உட்கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | லிமிட்டுக்கு அதிகமா உப்பு சாப்பிட்டா இவ்வளவு ஆபத்து இருக்கா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ