மூளை ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமானது என்றாலும், முதியோருக்கு அது ஒரு பிரச்சனையாகவும் நோயாகவும் மாறுகிறது. வயது அதிகமாகும்போது நினைவாற்றல் குறையத் தொடங்குகிறது. அம்னீசியா டிமென்ஷியா என பல பிரச்சனைகள் ஏற்படும்போது, மறதி பிரச்சனையாக மாறும். அறிவாற்றல் வீழ்ச்சியடையாமல் இருக்கவும் ஆரோக்கியமாகவும் வாழ உணவும் அதிலும் குறிப்பாக பழங்களும் குறிப்பிடத்தக்க பங்களிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு அறிவாற்றல் குறைபாடுகள் (Brain Health) ஏற்படும் அபாயம் அதிகம். வைட்டமின் D சத்தின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படும் சூரிய ஒளியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாமே?


இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளி மட்டுமல்ல, அப்படியே சாப்பிட்டக்கூடிய பழங்களும் பல நன்மைகளைத் தருகின்றன. சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படும் உணவுகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியுள்ளன. அதிலும் பழங்கள் இயற்கையான சத்துக்களை கொண்டுள்ளன.


 வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் பிரச்சனைகளைத் தீர்க்கவும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தேவையான பழங்களில் ஒன்று ப்ளூபெர்ரி என்றழைக்கப்படும் அவுரிநெல்லி.


வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்துக்கள், ஃபோலேட் சத்து, மினரல்கள், இரும்புச்சத்து, ஜிங்க், மாங்கனீசு என பல்வேறு ஊட்டச்சத்துக்கலின் சுரங்கமாக இருக்கும் ப்ளூபெர்ரி பழங்களில் உள்ள ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் மூளையை அதிகரிக்கும் வலிமையை பெற்றுள்ளது.


இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் கலவைகள், இவை, செல் சேதத்தைத் தடுக்கிறது. அவுரிநெல்லியில் ஃபிளாவனாய்டுகள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அது மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.


மேலும் படிக்க | மூளை சுறுசுறுப்பாக இருக்க செய்ய வேண்டிய ‘சில’ பயிற்சிகள்!


அவுரிநெல்லிகள் மூளைக் கோளாறுகளின் அபாயத்தை எவ்வாறு குறைக்கிறது?


நினைவுத்திறன் அதிகரிப்பு: அவுரிநெல்லிகளை தொடர்ந்து உட்கொள்வது நினைவக செயல்பாட்டை மேம்படுத்தும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. ஜர்னல் ஆஃப் அக்ரிகல்சுரல் அண்ட் ஃபுட் கெமிஸ்ட்ரியில் வெளியிடப்பட்ட ஆய்வில், 12 வாரங்களுக்கு தினமும் புளூபெர்ரி ஜூஸை உட்கொண்டவர்களுக்கு நினைவாற்றலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.


மூளை செயல்பாடு மேம்படும்: அவுரிநெல்லிகள் அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்தும் திறனைக் கொண்டது. கவனச்சிதறலை தடுத்து, கவனத்தை ஈர்க்கும் திறன் மற்றும் விரைவான முடிவெடுக்கும் திறன்களுக்கு வழிவகுக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


முதுமையை தள்ளிபோடும் அவுரிநெல்லி: அறிவாற்றலுக்கு தேவையான சத்துக்கள் மட்டுமல்ல, பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள் நிறைந்த உணவை உட்கொள்வது அறிவாற்றல் முதுமையை 2.5 ஆண்டுகள் வரை தாமதப்படுத்துகிறது என்று அன்னல்ஸ் ஆஃப் நியூராலஜி (Annals of Neurology) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


நியூரோடிஜெனரேட்டிவ் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு: அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பு தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க அவுரிநெல்லிகள் உதவும் என்பதற்கு நம்பிக்கைக்குரிய சான்றுகள் உள்ளன. அவுரிநெல்லியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளையில் நச்சுப் புரதங்களின் உருவாக்கத்தை எதிர்க்கவும் பயன்படுகின்றன.  


எனவே, உங்கள் உணவில் அவுரிநெல்லி எனப்படும் ப்ளூபெர்ரியை சேர்த்தால் இளமையாகவும், அறிவாற்றலுடனும் இருக்கலாம்.


மேலும் படிக்க | Brain Health: ஆற்றல் மிக்க மூளைக்கு... ‘இந்த’ சத்துக்கள் ரொம்ப அவசியம்!


(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | மூளைத்திறன் முதல் உடல் பருமன் வரை... விருக்ஷாசனம் செய்யும் மாயங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ