கோடை காலத்தில் எந்தெந்த காய்கறிகளை சாப்பிடலாம்?... விவரம் இதோ
கொளுத்தும் கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து உள்ளிட்ட சத்துக்களை தக்கவைக்க எந்தெந்த காய்கறிகளை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முனந்தாகவே மக்களால் வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிவருகின்றனர்.
கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடலில் நீர்ச்சத்து அவசியம். அதை தக்க வைப்பதற்கு பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
அந்தவகையில் எந்தெந்த காய்கறிகளை சாப்பிடலாம் என்பதை இதில் பார்க்கலாம்.
வெள்ளரி:
வெள்ளரி நீர்ச்சத்து உள்ள காய்கறிகளில் முக்கியமானது. இதனை சாப்பிடுவதால் உடல் நீர்ச்சத்தை இழக்காது. சிறுநீரக பாதிப்பிலிருந்தும் தப்பலாம். குறிப்பாக வெள்ளரியை பிஞ்சாக சாப்பிடுவது மிகவும் நல்லது.
தக்காளி:
வெள்ளரி போல் தக்காளியிலும் நீர்ச்சத்து அதிகளவு இருக்கிறது. 93 சதவீதம் தண்ணீரும், உடலை சுத்தம் செய்யும் ஆண்டி ஆக்ஸிடண்ட்டும் இருப்பதால், இதை சாப்பிடுவதன் மூலம் உடலில் வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம்.
குடைமிளகாய்:
குடைமிளகாயில் 90 சதவீதம் நீர் இருப்பதால் கோடை காலத்தில் உடலுக்கு நல்லது. இதில் நீர்ச்சத்து மட்டுமின்றி வைட்மின்கள் சி,ஏ,கே ஆகியவையும் உள்ளன.
சுரைக்காய்:
சுரைக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்து இருப்பதன் காரணமாக இதனை தாராளமாக சாப்பிடலாம். இதை சாப்பிடுவதன் மூலம் உடலானது நீர்ச்சத்து பெறுவதோடு மட்டுமின்றி புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
மேலும் படிக்க | அசைவத்தோடு சேர்த்து எதையெல்லாம் சாப்பிடக்கூடாது...
வெள்ளை பூசணிக்காய்:
வெள்ளை பூசணிக்காயிலும் அதிகளவு நீர்ச்சத்து இருப்பதன் காரணமாக உடலானது வறட்சியின்றியும், நீர்ச்சத்தோடும் காணப்படும். இதனால் கொளுத்தும் வெயிலிலிருந்து தப்பிக்கலாம்.
மேலும் படிக்க | கோடையில் உடலில் உருவாகும் கட்டிகள்... போக்கும் வழிமுறைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe