அசைவத்தோடு சேர்த்து எதையெல்லாம் சாப்பிடக்கூடாது...

அசைவத்தோடு சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அவை உடல்நலத்துக்கு கோளாறை விளைவிக்கும்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 11, 2022, 04:33 PM IST
  • அசைவ உணவோடு சாப்பிடக்கூடாத உணவுகள்
  • சில உணவுகள் உடல்நலத்துக்கு கோளாறு விளைவித்துவிடும்
அசைவத்தோடு சேர்த்து எதையெல்லாம் சாப்பிடக்கூடாது...  title=

உலகத்தில் பெரும்பான்மையானோர் அசைவ பிரியர்களாக இருக்கின்றனர். சிலருக்கு வாரம் முழுவதும் அசைவ உணவு தேவைப்படும். ஆனால் தற்போதைய காலத்தில் அசைவத்தோடு பல உணவுகளை சேர்த்து சாப்பிடுகின்றனர். இதனால் உடலுக்கு பிரச்னைகள் ஏற்படுவதும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் அசைவத்தோடு எதை எதை சாப்பிடக்கூடாது என்பதை விவரிக்கிறது இந்தத் தொகுப்பு.

முள்ளங்கி

முள்ளங்கியும், இறைச்சியும்:

அசைவ உணவோடு வேகவைத்த முள்ளங்கியை சாப்பிட்டால் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்தும், முள்ளங்கியில் இருக்கும் புரத ஊட்டச்சத்தும் அதிகரிக்கும். இதனால் உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மையாக மாற வாய்ப்பு இருக்கிறது.

உருளைக்கிழங்கும், இறைச்சியும்:

உருளைக் கிழங்கு

அசைவத்தோடு மண்னுக்கு அடியில் விளையும் கிழங்குகளை சேர்த்து உண்பதால் கிழங்குகள் மற்றும் இறைச்சி செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். மேலும், உடல் எடை அதிகரித்து, வாயு தொல்லை உருவாகும்.

மைதாவும், இறைச்சியும்:

மைதா

மைதா வகை உணவுகளுக்கு செரிமான சக்தி பொதுவாகவே குறைவாக இருக்கும். இதனால் மலச்சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

கீரையும், இறைச்சியும்:

கீரை

அசைவத்தோடு கீரையை சேர்த்து சாப்பிடுவதால் செரிமான கோளாறு ஏற்பட்டு கல்லீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

மேலும் படிக்க | விளாம்பழ ஜூஸ் குடிச்சா நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சனையா: உண்மை என்ன

குளிரான உணவு பண்டங்களும், இறைச்சியும்:

ஐஸ் க்ரீம்

ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களை அசைவம் சாப்பிட்டதும் உட்கொண்டால் அது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | அன்னையர் தினம் 2022: நம்மை அன்பு மழையில் நனைக்கும் தாயை மகிழ்விக்க சிறந்த பரிசுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News