நரை முடி கருமையாக வளர வீட்டிலேயே இத செஞ்சா போதும்
Hair Colour: பலர் இயற்கையான வழிகளிலேயெ கூந்தலை கருமையாக்க விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு துளசி மற்றும் நெல்லிக்காய் கண் கண்ட உபாயமாக உதவுகின்றன.
கூந்தலை கருமையாக்குவதற்கு பல்வேறு பொருட்கள் வந்துவிட்டன. எனினும் இவற்றில் ரசாயனப் பொருட்கள் கலந்துள்ளன. பலர் இயற்கையான வழிகளிலேயெ கூந்தலை கருமையாக்க விரும்புகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு துளசி மற்றும் நெல்லிக்காய் கண் கண்ட உபாயமாக உதவுகின்றன. இவை இரண்டையும் பயன்படுத்தி, இயற்கையான முறையில் முடியை கருமையாக்கலாம். துளசி மற்றும் நெல்லிக்காய் கொண்டு எப்படி வெள்ளை முடியை கருமையாக்குவது என தெரிந்து கொள்வோம்.
துளசியில் பல குணங்கள் உள்ளன. அவை முடி பிரச்சனைகளை போக்க உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் முடியில் உள்ள பொடுகை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும்.
துளசி மற்றும் நெல்லிக்காயை எவ்வாறு பயன்படுத்துவது
வல்லுனர்களின் கூற்றுபடி, துளசி மற்றும் நெல்லிக்காய் வெள்ளை முடியை மீண்டும் கருப்பாக்க மிகவும் உதவியாக இருக்கும். துளசியை அரைத்து நெல்லிக்காய் பொடியுடன் கலந்து சிறிது தண்ணீரில் ஊறவைத்து இரவு முழுவதும் அப்படியே விடவும். காலையில் குளிக்கும்போது இந்தக் கரைசலைக் கொண்டு தலையைக் கழுவுங்கள். முடியை இயற்கையான முறையில் கருப்பாக வைத்திருக்க, இந்த முறையை சில மாதங்களுக்கு பின்பற்றினால் பலன் கிடைக்கும்.
மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!
நெல்லிக்காய் மற்றும் துளசி விழுதை இப்படி செய்து கொள்ளவும்
உங்களுக்கும் தலைமுடி நரைக்கும் பிரச்சனை இருந்தால் இந்த பேஸ்ட் உங்களுக்கு உதவியாக இருக்கும். நெல்லிக்காய் மற்றும் துளசி இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இதற்குப் பிறகு, இந்த பேஸ்ட்டை ஒரு கப் தண்ணீரில் கரைத்து, முடியின் வேர்களில் தடவி, உலர்த்திய பின் நீர் கொண்டு முடியைக் கழுவவும். விரைவில் உங்கள் முடி கருப்பாக மாற ஆரம்பிக்கும்.
பளபளப்பைக் கொண்டுவர நெல்லிக்காயைப் பயன்படுத்துங்கள்
கூந்தலுக்கு பளபளப்பைக் கொண்டுவர நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம். நெல்லிக்காய் சாறுடன் நன்றாக மசாஜ் செய்தால் கூந்தலுக்கு பளபளப்பு கிடைக்கும். இதற்குப் பிறகு, ஒரு மணி நேரம் கழித்து உங்கள் தலைமுடியை சுத்தமான தண்ணீரில் கழுவவும். இது கூந்தலுக்கு இயற்கையான பொலிவைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் பரிந்துரையாகவோ கோரிக்கையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR