இயற்கையான முறையில் வெள்ளை முடியை மீண்டும் கருப்பாக்குவது கடினம் அல்ல, ஆனால் இதற்காக நீங்கள் சில கடினமான செயல்முறையை பின்பற்ற வேண்டியிருக்கும், அப்போதுதான் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். மாறிவரும் வாழ்க்கை முறையால் பெரும்பாலானோரின் தலைமுடி சிறு வயதிலேயே வெள்ளையாக மாற ஆரம்பித்துவிடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், அதிலிருந்து விடுபட வேண்டுமானால், சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கெமிக்கல் நிறைந்த சாயம் மற்றும் முடி நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள், இதனால் அவர்களின் தலைமுடி கருமையாக மாறாமல் மோசமடையத் தொடங்குகிறத. எனவே உங்கள் நரை முடியை கருமையாக்குவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்


வெங்காயச் சாறு வெள்ளை முடியை கருப்பாக்கும்
வெங்காயச் சாறு அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளையும் நீக்குவது மட்டுமின்றி, வெள்ளை முடி பிரச்சனையும் படிப்படியாக முடிவுக்கு வரும். இதனை தொடர்ந்து உங்கள் தலைமுடியில் தடவி வந்தால், அதன் பலனை நீங்களே காணத் தொடங்குவீர்கள்.


நெல்லிக்காயும் வெள்ளை முடியை கருப்பாக மாற்றும்
நெல்லிக்காயில் வைட்டமின்கள் நிறைந்தது. அத்தகைய சூழ்நிலையில், முடிக்கு கிடைக்கும் வைட்டமின்களுக்கு இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மருதாணி அல்லது முட்டையுடன் நெல்லிக்காயை கலந்து கூந்தலில் தடவி வந்தால், முடி கருப்பாக மாற ஆரம்பிக்கும்.



தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் உங்கள் வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதைச் செய்ய, இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை உங்கள் தலைமுடியில் தடவ வேண்டும், இதன் ரிசல்டை படிப்படியாக நீங்கள் காண்பீர்கள். தேங்காய் எண்ணெய் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது, இதன் காரணமாக முடி மீண்டும் மீண்டும் வெள்ளையாக மாறாது.


கருஞ்சீரகம் மற்றும் ஆலிவ் எண்ணெய்
1 தேக்கரண்டி கருஞ்சீரகத்தில் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலக்கவும். இப்போது முடியின் வேர்களில் மசாஜ் செய்யவும், பின்னர் 1 மணி நேரம் கழித்து ஷாம்பு செய்யவும். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.


(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR