நரை முடி கருமையாக வளர தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவினால் போதும்
Premature White Hair: பலர் நரை முடி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர், அத்தகைய சூழ்நிலையில் தேங்காய் எண்ணெய் நரை முடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதில் சில ஆயுர்வேத விஷயங்களை கலந்தால் போதும்.
வெள்ளை முடிக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு: வயது அதிகரிக்கும்போது, நமக்கு பலவித சரும பிரச்சனையும், முடி பிரச்சனையும் வரத்தான் செய்கிறது. அதிலும், நரைத்த முடி வந்துவிட்டால், பாதி வாழ்க்கையே முடிந்து போய்விட்டதென கவலை அடைவோர் தான் நம் நாட்டில் அதிகம். முன்பெல்லாம், நரைத்த முடி தான் ஒருவருடைய வயதையே தீர்மானித்தது. ஆனால் இன்று இளம் வயதிலேயே நரைத்த முடி வந்துவிடுகிறது. இதற்கு காரணமாக மனஅழுத்தம், தவறான உணவு பழக்கவழக்கம், கெமிக்கல் பயன்பாடு மற்றும் முடிக்கு கலர் அடித்தல் போன்றவை உள்ளது.
பொதுவாக நாம் இதற்கு தீர்வாக தேடி செல்வது ஹேர் டையை தான். ஆனால், ஒரு சில வீட்டு வைத்தியத்தை செய்வதாலும் நம்மால் இந்த நரைத்த முடிக்கு நிரந்தர தீர்வை பெற முடிகிறது. அத்தகைய சூழ்நிலையில், முடி கருமையாக இருக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க | கல்லீரல் பிரச்சனை அண்டாமல் இருக்க... தினசரி டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்!
முடி மீண்டும் கருப்பாக மாற என்ன செய்ய வேண்டும்
தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு முக்கிய மருந்தாகக் கருதப்படுகிறது, தலைமுடியை பளபளப்பாக்குவது மட்டுமின்றி, முடி உதிர்வதையும் போக்குகிறது, ஆனால் இந்த எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவினால் முடி கருமையாக மாறும். மேலும் இது முடிக்கு சிறந்த ஊட்டச்சத்தையும் தரும்.
எலுமிச்சை ஏன் முடிக்கு நன்மை பயக்கும்?
முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த எலுமிச்சை எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பொடுகு எளிதில் நீங்கும், அத்துடன் முடி வளர்ச்சிக்கும் இது மிகவும் நன்மை பயக்கும். உங்கள் தலைமுடி நேரத்திற்கு சிறு வயதிலேயே வெள்ளையாக மாறாமல் இருக்க விரும்பினால், இதற்கு உங்கள் தலைமுடியில் எலுமிச்சை தடவ வேண்டும். அதேபோல் இதில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.
வெள்ளை முடியை கருப்பாக்குவது எப்படி
வயது அதிகரிக்கும்போது முடி நரைப்பது பொதுவானது, ஆனால் இது இளம் வயதிலேயே நடந்தால், எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெயின் உதவியுடன் சரி செய்யலாம். உடலில் மெலனின் உற்பத்தி குறையும் போது நம் முடி நரைக்க ஆரம்பிக்கும். வெள்ளை முடியின் துகள்களில் ஹைட்ரஜன் பெராக்சைடு உருவாகத் தொடங்குகிறது. தேங்காய் எண்ணெயில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து உச்சந்தலையில் இருந்து முடியின் நுனி வரை தடவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து இயற்கையாகவே கூந்தல் கருப்பாக மாறும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 'ஸ்லோ பாய்சன்’ சர்க்கரையை உணவில் இருந்து குறைக்க சுலபமான வழிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ