புதுடெல்லி: கோவிட் -19 இன் தோற்றம் குறித்த  WHO மற்றும் சீனா மேற்கொண்டுள்ள கூட்டு ஆய்வில், கொரோனா வைரஸ் வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு மற்றொரு விலங்கு வழியாக பரவுவது பெரும்பாலும் சாத்தியமானதே என்றும், ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிவதற்கான சாத்தியங்கள் அதிகமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதை அசோசியேட்டட் பிரஸ் திங்களன்று அறிவித்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID-19 முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவின்  வுஹானுக்கு ஜனவரி மத்தியில் இருந்துபிப்ரவரி இரண்டாவது வாரம் வரை உலக சுகாதார அமைப்பு (WHO) சர்வதேச நிபுணர்களின் குழு சென்று ஆய்வுகளை மேற்கொண்டது.


செய்தி நிறுவனமான The Associated Press வெளியிட்ட  வரைவு நகலில், இந்த கண்டுபிடிப்புகள் வைரஸ் எவ்வாறு முதலில் தோன்றியது என்பது பற்றிய புதிய நுணுக்காமான ஆய்வை வெளிப்படுத்துகிறது. இதில் பல கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை என்றாலும் கூட, ஆய்வாளர்களின் முடிவுகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்து இந்த அறிக்கை கூடுதல் விவரங்களை அளிக்கிறது. 


Also Read | இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது


கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்கலாம் என்ற கருதுகோளைத் தவிர ஒவ்வொரு பகுதியிலும் மேலதிக ஆய்வுகளை இந்த கூட்டுக் குழு முன்மொழிந்துள்ளது.


WHO அறிக்கையில் பட்டியலிடப்பட்ட COVID-19 இன் தோற்றம் பற்றிய 4 சாத்தியக்கூறுகள்
வரைவு ஆய்வில், SARS-CoV-2 என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகளின் பொருட்டு ஆராய்ச்சியாளர்கள் நான்கு காரணங்களை பட்டியலிட்டனர். இந்த பட்டியலில் முதலிடம் பெறுவது வெளவால்களிலிருந்து (Bats) வேறொரு விலங்கு வழியாக பரவுவவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்று அவர்கள் கூறினர். அவர்கள் வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவுவதை மதிப்பீடு செய்தனர், மேலும் குளிர் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மூலம் பரவுவது சாத்தியம் என்றாலும், அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்ததாக சாத்தியமில்லை என்று கூறினர்.


வெளவால்கள் கொரோனா வைரஸ்களை பரப்புவதாக சொல்லப்படுகிறது, உண்மையில், COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸின் நெருங்கிய வைரஸ், வெளவால்களில் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த வைரஸ்களுக்கும் SARS-CoV-2க்கும் இடையிலான பரிணாம தூரம் பல தசாப்தங்களாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஒரு விடுபட்ட இணைப்பைக் குறிக்கிறது.


Also Read | மக்களே கொரோனா தடுப்பூசியை தேர்ந்தெடுக்கலாம் என ஜப்பான் அறிவித்ததன் பின்னணி!


மற்றொரு வகை பாலூட்டிகளான பாங்கோலின்களில்  SARS-CoV-2-ஐ  மிகவும் ஒத்த வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் மிங்க் மற்றும் பூனைகள் COVID-19 வைரஸால் பாதிக்கப்படுகின்றன என்பதையும் அவை கொரோனா வைரஸ் (Coronavirus) கேரியர்களாக இருக்கலாம் என்று கூறுகின்றன.


உறைய வைக்கப்பட்ட உணவு இறக்குமதிகள் மூலம் வைரஸ் பரவுவதற்கான சான்றுகள்
உலகளவில் தொற்றுநோய் பரவியதால், பேக்கேஜிங் செய்யப்பட்ட உறைநிலை உணவுகளில் வைரஸின் மாதிரிகள் கண்டறியப்பட்டன.  


குளிர் பதனப்பட்ட பொருட்களின் மூல வைரஸ், நீண்ட தொலைவுக்கு பரவியிருக்கக்கூடும் என்றாலும், அது மிகப்பெரிய அளவில் பரவியிருப்பதான வாய்ப்புகள் குறைவு என்று வரைவு அறிக்கை கூறியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவும் சுவாச நோய்த்தொற்றைக் காட்டிலும், கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து குறைவாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது, இந்தக் கருத்தை பெரும்பாலான நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.


Also Read | ரஷ்யாவின் ஸ்பூட்னிக் -5 தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைக்கலாம்: Dr Reddy's


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR