சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2022 ஏலத்தின் போது, ஏலத்தை தொகுத்து வழங்கிய ஹக் எட்மீட்ஸ் திடீரென மயங்கி விழுந்தார். இதன் காரணமாக ஏலம் சிறிது நேரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. அவர் மயங்கி விழுந்தது அங்கு இருந்தவர்களையும், ஏலத்தை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் பீதியிலும் கவலையிலும் ஆழ்த்தியது. அவர் நன்றாக இருக்கிறார் என்ற செய்தி வரும்வரை கவலை நீடித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படிப்பட்ட அனுபவம் பலருக்கு நேர்ந்திருக்கலாம். நம்மில் பலர் திடீரென மயக்கம் , தலை சுற்றல் போன்றவற்றை அனுபவித்திருப்போம். இதற்கான காரணம் என்ன? பொதுவாக திடீரென மயக்கம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். 


மனித உடலில் எப்போது எந்த நோய் வரும் என யாராலும் கூற முடியாது. முற்றிலும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருப்பவர் திடீரென மயங்கி விழுவதைப் பலமுறை நாம் பார்த்திருக்கிறோம். இப்படி ஏன் நடக்கிறது என்று நாம் பலமுறை யோசித்தும் இருக்கிறோம். ஒரு நபருக்கு திடீரென மயக்கம் வருவதற்கான இருக்கும் சில பொதுவான காரணங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


மூளையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், ஒருவர் சுயநினைவை இழக்கிறார் என்று கூறப்படுகிறது. எனினும், இது தவிர, ஒருவர் சுயநினைவை இழக்க பல காரணங்கள் உள்ளன. 


மேலும் படிக்க | நீரிழிவு நோய்க்கு அதிமருந்தான வெந்தயத்தின் அற்புத நன்மைகள் 


இருதய நோய்


இதய நோய் உங்கள் மூளைக்கு இரத்த விநியோகத்தை பாதிக்கிறது என்பதால் இது மயக்கம் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த வகையான மயக்கம் மருத்துவத்தில் கார்டியாக் சின்கோப் என்று அழைக்கப்படுகிறது.


நீரிழப்பு


மனித உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருந்தால், அது சுயநினைவின்மை பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இரத்தத்தில் திரவம் இல்லாததால் இரத்த அழுத்தம் குறைகிறது. இது மயக்கம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.


 குறைந்த இரத்த அழுத்தம்


குறைந்த இரத்த அழுத்தம் மயக்கத்திற்கு ஒரு முக்கிய மற்றும் முதன்மைக் காரணம் ஆகும். உடலில் இரத்த ஓட்டம் சரியாக இல்லாதபோது, மயக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனை பெரும்பாலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்படுகிறது.


சர்க்கரை நோய்


நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம் ஏற்படும் பிரச்சனை அதிகமாகலாம். ஏனெனில் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாக வெளியேறும் பிரச்சனை இருக்கும். இதனால் நீரிழப்பு அதிக ஆபத்து இருக்கலாம். இதன் காரணமாகவும் தலை சுற்றல் ஏற்படலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Diabetes நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவதால் ஆதாயமா? ஆபத்தா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR