நீரிழிவு நோய்க்கு அதிமருந்தான வெந்தயத்தின் அற்புத நன்மைகள்

வெந்தயத்தை சாப்பிடாமல் இருந்தால், இன்றே உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அதில் பல நன்மைகள் உள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 14, 2022, 02:55 PM IST
  • வெந்தயத்தை இன்று முதல் சாப்பிடத் தொடங்குங்கள்
  • சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்
  • பெண்களுக்கு மாதவிடாயில் ஏற்படும் வலி நீங்கும்
நீரிழிவு நோய்க்கு அதிமருந்தான வெந்தயத்தின் அற்புத நன்மைகள் title=

புதுடெல்லி: வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. அதேபோல் வெந்தயம் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. வெந்தயம் பெரும்பாலும் சமையலில் பயன்படுத்தப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த மசாலா மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே அதன் பலன்களை தெரிந்து கொள்வோம்.

வெந்தயத்தின் பல நன்மைகள்
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வெந்தயம் பல நோய்களுக்கு சிறந்த சிகிச்சையாகும். வெந்தயம் நமது செரிமானத்தை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமல்ல, இது மலச்சிக்கலுக்கும் சிகிச்சையளிக்கிறது. இது தவிர, வெந்தயத்தை உட்கொள்வது இதய நோய்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது தவிர, மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி உள்ள பெண்களுக்கு வெந்தயம் எடுத்துக்கொண்டால் நன்மை தரும்.

மேலும் படிக்க | புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!

நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்
இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. 

இன்சுலின் சுரப்பைக் கூட்ட இது ஒண்ணு போதும்
வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் போது இன்சுலினை சுரக்க செய்து சரி யான அளவில் கொண்டு வருகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பு ஏற்றத்தாழ்வுடன் இருப்பதே நீரிழிவு கூடுவதற்கு காரணம். வெந்தயத்தைச் சாப்பிடும் போது இன்சுலின் சுரப்பு அதிகமாகும்.

வெந்தயம் உட்கொள்ள சிறந்த வழி என்ன
ஒரு ஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் வெந்நீரில் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் ஊற விடவும். சுவைக்காக எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை தேன் சேர்த்து வடிகட்டி, சூடான தேநீராக பருகலாம்.

மேலும் படிக்க | ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News