பொதுவாக இஞ்சி சாறு பசியைத் தூண்டும், உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் பயன்களை பார்ப்போம்:-


செரிமானம் நல்ல:-


இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்பட்டு நல்ல செரிமானம் ஆகும். மேலும் இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.


 


கொழுப்பு குறைக்க:-


இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். மேலும் இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர கொழுப்பு கரைந்து விடும்.


 


முகப்பரு போக்க:-


இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். முகப்பருக்கள் வராது.


 


புற்றுநோய்:-


இஞ்சி சாறு குடிப்பதால் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. ஒரு ஆய்வு மூலம் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவடையச் செய்கிறது என்று கண்டறியப்பட்டது.


 


சளி குணப்படுத்தல்:-


இஞ்சி சாறு சளிக்கு நல்ல நிவாரணமாக இருக்கும். இஞ்சி சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை பிரச்னை அறவே இருக்காது.