வாஷிங்டன்: பரவலாகப் பயன்படுத்தப்படும் பல இரசாயனப் பொருட்கள், பெண்களுக்கு கருப்பை மற்றும் பிற வகையான புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் Disease Control and Prevention (CDC)Disease Control and Prevention (CDC)) சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி கல்வி ஆய்வாளர்கள் குழு நடத்திய ஆய்வில், சில புற்றுநோய்களுக்கு காரணமாகும் ரசாயனங்கள் பற்றிய உண்மைகள் வெளிவந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புற்றுநோய்களுக்கு காரணமாகும் ரசாயனங்கள்


அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட சமீபத்திய ஆய்வு, Journal of Exposure Science and Environmental Epidemiology (வெளிப்பாடு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் தொற்றுநோயியல் இதழ்) என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டது. ஹார்மோனால் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் ரசாயனங்களின் பயன்பாட்டை அதிகம் செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.  


புற்றுநோய் தொடர்பான ஆய்வுகள்


ஹார்மோன் செயல்பாட்டை சீர்குலைக்கும் காரணிகள்: "இந்த PFAS இரசாயனங்கள் பெண்களில் ஹார்மோன் செயல்பாட்டை சீர்குலைப்பதாக தோன்றுகிறது, இது பெண்களுக்கு ஹார்மோன் தொடர்பான புற்றுநோயை அதிகரிக்கும் சாத்தியமான வழிமுறையாகும்" என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி ஆசிரிய விஞ்ஞானியும் ஆய்வின் முதன்மை ஆசிரியருமான அம்பர் கேத்தே தெரிவித்துள்ளார்.


அதேசமயம் ஆண்களில் இரசாயன மற்றும் புற்றுநோய் கண்டறிதல்களுக்கு இடையே ஒத்த தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை.


மேலும் படிக்க | 7 நிமிடத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை! கேன்சர் எதிர்ப்பு ஊசி கண்டிபிடித்த NHS


சுகாதார எச்சரிக்கை 


மவுத்வாஷ் மற்றும் உணவு பேக்கேஜிங் உள்ளிட்ட பல வீட்டுப் பொருட்களில் இருக்கும் ஒரு கரிம கலவை பெண்களை பாதிக்கிறது. புற்றுநோயால் கண்டறியப்பட்ட பெண்களுக்கும் ஃபீனால்களின் அதிக வெளிப்பாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளையும் ஆய்வு கண்டறிந்துள்ளது. கருப்பை மற்றும் கருப்பை புற்றுநோய்களுடன் தொடர்புடைய அதிக PFAS வெளிப்பாடுகள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.


பயோமோனிட்டரிங் தரவுகள்


2005 முதல் 2018 வரையான CDC பயோமோனிட்டரிங் திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட 10,000க்கும் அதிகமான தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  புற்றுநோய் கண்டறிதல்கள் மற்றும் பங்கேற்பாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள பிஎஃப்ஏஎஸ் மற்றும் பீனால்களின் அளவைப் பார்த்தனர்.


கறைகளை போக்கும் ரசாயனங்கள், துணிகள், துப்புரவு பொருட்கள், வண்ணப்பூச்சுகள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வீட்டு மற்றும் தொழில்துறை தயாரிப்புகளில் PFAS பயன்படுத்தப்படுகிறது, இவை நீண்ட காலமாக சூழலில் இருப்பதால் "எப்போதும் எங்கும் உள்ள இரசாயனங்கள்" (forever chemicals) என்று அழைக்கப்படுகின்றன.


மேலும் படிக்க | பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்கள்! 5 கேன்சர்களை காண்பிக்கும் அடையாளங்கள்


ரசாயன பயன்பாட்டை தவிர்க்க முடியுமா? 


இந்த இரசாயனங்கள் இல்லாத பொருட்களே இல்லை என்ற சூழலில், இந்த ரசாயனங்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதை PFAS 97 சதவீத அமெரிக்கர்களின் இரத்தத்தில் காணப்படுகிறது என்ற  CDC இன் முந்தைய அறிக்கை நிரூபிக்கிறது. எனவே, மக்கள் ரசாயனங்கள் தொடர்பான விழிப்புணர்வை பெறுவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. 


எப்போதும் எங்கும் உள்ள இரசாயனங்கள்


பெருமளவில் பயன்படுத்தப்படும் "எப்போதும் எங்கும் உள்ள இரசாயனங்கள்" (forever chemicals) இந்த புற்றுநோய் கண்டறிதலுக்கு வழிவகுத்தன என்பதை நிரூபிக்கவில்லை என்றாலும், அவை சாத்தியமான பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்பதற்கான வலுவான சமிக்ஞையாக இந்த ஆய்வு எச்சரிக்கை மணி அடிக்கிறது. இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க |  இரண்டு மறை பல் தேய்த்தும் மஞ்சள் கறை போகவில்லையா... இதை செய்து பாருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ