பெண்களே 30 வயது கடந்துவிட்டீர்களா? இந்த மருத்துவ பரிசோதனைகள் அவசியம்..!
பெண்களை பொறுத்தவரை 30 வயதை கடந்துவிட்டால் சில மருத்துவ பரிசோதனைகளை தவிர்க்காமல் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். தைராய்டு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் அவசியம்.
உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் நீண்ட ஆயுளுடன் இருக்கலாம். உணவு மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் சரியாக இருக்கும்பட்சத்தில் நிம்மதியாக இருக்கலாம். அதேநேரத்தில் வயதுக்கும், வயது சார்ந்த நோய்களுக்கும் தொடர்பு இருப்பதால், குறிப்பிட்ட நேரங்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 30 வயதை கடந்த பெண்கள் உடல் நலன் தொடர்பான வாடிக்கையான பரிசோதனைகளை அவ்வபோது செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நீரிழிவு பரிசோதனை : நீரிழிவு இன்று பலருக்கு இருக்கக்கூடிய நோய்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆரோக்கியமான வாழ்வியல் நடைமுறை மற்றும் தினசரி உடற்பயிற்சி போன்றவற்றின் மூலமாக நீரிழிவு அபாயத்தை தடுக்க முடியும் என்றாலும் கூட, பல வகையிலும் எப்படியாவது இது நம்மை பாதித்து விடுகிறது. இருப்பினும் நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு உள்ளிட்ட பல அபாயங்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். ஆகவே, இரத்த குளுக்கோஸ் பரிசோதனை, ஹெச்ஏஒன்சி பரிசோதனை போன்றவற்றை செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | மூளையை பலவீனமாக்கும் விட்டமின் B12 குறைபாடு! தவிர்க்க சாப்பிட வேண்டியவை!
கர்ப்பபை புற்றுநோய் பரிசோதனை : 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அதிகம் பாதிக்கக்கூடிய நோய்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. பாப் ஸ்மியர் பரிசோதனை மூலமாக இதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை நீங்கள் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக உங்களுக்கு மாதவிலக்கு சுழற்சி சீரற்றதாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
இதய பரிசோதனை : உங்கள் இதயம் எப்போதாவது ஒரு நொடி துடிக்க மறந்திருக்கலாம். ஆனால், இதை நீங்கள் சாதாரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. சீரற்ற இதயத்துடிப்பு, நீடித்த சோர்வு, மிகுதியான கவலை போன்றவற்றை நீங்கள் அலட்சியம் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு இதய நோய்கள் வெகு இயல்பாக தாக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. ஆகவே, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு, ரத்த குளுக்கோஸ் போன்றவற்றை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதேபோல ரத்தத்தில் உள்ள சி ரியாக்டிவ் புரதம் அளவையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மார்பக பரிசோதனை: உங்களுக்கு 30 வயது அடையும் போது மார்பகங்களை பரிசோதனை செய்து கொள்ள தயக்கம் காட்டக்கூடாது. இன்றைக்கு பல பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பெரும் அபாயமாக உருவெடுத்துள்ள நிலையில் எக்ஸ்ரே பரிசோதனை, மேமோகிராபி பரிசோதனை போன்றவற்றை ஆறு மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தைராய்டு பரிசோதனை : பெண்களை மட்டுமே அதிகமாக தாக்கக்கூடிய நோய்களில் ஒன்றாக தைராய்டு பிரச்சனை இருக்கிறது. தைராய்டு குறைபாடு இருக்கும் பட்சத்தில் அவர்களது மெட்டபாலிச நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும். இதனால் திடீரென உடல் எடை அதிகரிப்பது, எண்ண ஓட்டங்கள் தடுமாறுவது, மிகுதியான உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே, உங்கள் தொண்டை பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி முறையாக வேலை செய்கிறதா என்பதை ரத்த பரிசோதனை மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ