World Blood Donation Day 2024: உலகில் நாம் செய்யும் சிறந்த விஷயங்களில் ஒன்று ரத்ததானம் ஆகும்.  ஜூன் 14ஆம் தேதி அன்று உலக ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. விபத்து காரணமாகவோ அல்லது ஒரு சில நோய் பாதிப்புகள் காரணமாகவோ பலருக்கு ரத்தம் தேவைப்படலாம். அவர்களுக்கு உதவும் வகையில் அடிக்கடி ரத்த தானம் செய்பவர்களை இந்த உலகம் ஹீரோ போல பார்க்கிறது. ஆனால் ரத்த தானம் கொடுத்த பிறகு என்னென்ன சாப்பிட வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? அது குறித்துஇங்கு பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாப்பிட வேண்டியவை: 


அதிக இரும்புச் சத்துள்ள உணவு பொருட்கள்: 


ரத்ததானம் செய்வதற்கு முன், இரும்பு சத்து நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவது அவசியம் ஆகும். இதுதான் நம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். ரத்த தானம் செய்பவர்களுக்கு ஹீமோகுளோபின் அதிகமாக இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இதை அதிகமாக வைத்துக் கொள்ள வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதுவும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். 


நீர்ச்சத்து: 


ரத்ததானம் கொடுப்பதற்கு முன் நம் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே ரத்த தானம் செய்யும் நாளில் குறைந்தது 500 மில்லி லிட்டர் தண்ணீரையாவது அருந்தி இருக்க வேண்டும். 


சரியான ஓய்வு: 


ரத்த தானம் கொடுப்பதற்கு முன்னர் நன்றாக ஓய்வெடுத்து இருக்க வேண்டும். ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூக்கம் மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தூக்கமின்மையுடன் சென்று ரத்த தானம் கொடுக்கையில் ரத்த அழுத்தம் உருவாக்கி இதயத்துடிப்பு அதிகரிக்கலாம். ரத்த அழுத்தம் 180/100 அளவில் இருந்தால் உங்களால் ரத்தம் கொடுக்க முடியாது. 


சரியான உடை: 


ரத்த தானம் கொடுக்கும் சமயங்களில் தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது மிகவும் அவசியமாகும். காரணம், ரத்ததானம் கொடுக்கையில் இறுக்கமான ஆடைகளை அணிந்து இருந்தால் அது அசோகரித்து ஏற்படுத்தும் இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து உங்கள் இதயத்துடிப்பு எகிரலாம். தளர்வான ஆடையை உடுத்த வேண்டியதுதான இரண்டாவது காரணம், அப்படிப்பட்ட ஆடையை உடுத்தினால் தான் ஊசியை கையில் நுழைக்க உங்களால் ஆடையை மேலே தூக்க முடியும்.  அதுபோல ரத்தம் கொடுக்கையில் கைமுட்டிக்கு மேல் எந்த அழுத்தமும் இல்லாமலும் இருக்கும். 


கொழுப்பு நிறைந்த உணவுகள்:


அதிக அளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் இரத்த மாதிரிகளை சோதிக்கையில் பிரச்சனை வரலாம். எனவே இதிலிருந்து விலகி இருக்கவும். 


மேலும் படிக்க | பல்வலி, மஞ்சள் கறை நீக்க இதை மற்றும் செய்தால் போதும்.. மேஜிக் வீட்டு வைத்தியம்


ரத்தம் கொடுத்தபின் என்ன செய்ய வேண்டும்?


காலை உணவு: 


ரத்தம் கொடுத்தபின் உடலில் சோர்வான உணர்வு ஏற்படலாம். எனவே சரியான காலை உணவை சாப்பிட வேண்டியது அவசியம் ஆகும். இந்த உணவு இரும்பு சத்து நிறைந்த உணவாக இருக்க வேண்டும். 


பழச்சாறுகள்: 


சரியான அளவு தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை அருந்துவது மிகவும் அவசியமாகும். ரத்த தானம் கொடுத்த பின்னர் உடல் நீர் பற்றாக்குறை இது போன்ற உணர்வுடன் இருக்கலாம். இதை தவிர்க்க தண்ணீர் மற்றும் பழச்சாறு அவசியம். 


மது: 
ரத்தம் கொடுத்த பின்னர் 24 மணி நேரத்திற்கு மது அருந்துதல் கூடவே கூடாது. 


உடற்பயிற்சி: 


ரத்தம் கொடுத்த பின்னர் மிகவும் வலிமையான உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்கவும். இதனால் மயக்கம் அல்லது தலைசுற்றல் ஏற்படலாம். 


மேலும் படிக்க | ஷாருக்கான் பிட்டாக இருப்பதற்கு தந்தூரி சிக்கன் சாப்பிடுவது காரணமா? எல்லோரும் சாப்பிடலாமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ