நீண்ட நேரம் இறுக்கமான ஆடைகளை அணிந்தால் இவ்வளவு ஆபத்துகளா?

நீங்கள் நீண்ட நேரம் அணியும் மிகவும் இறுக்கமான ஆடைகள் வயிற்றில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும், இது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.  

Written by - RK Spark | Last Updated : Feb 19, 2023, 01:46 PM IST
  • இறுக்கமான ஆடைகளை அணிவது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
  • வயிற்று பகுதியில் இறுக்கமான ஆடைகளை அணிவது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
  • தோலில் பூஞ்சை தொற்று போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நீண்ட நேரம் இறுக்கமான ஆடைகளை அணிந்தால் இவ்வளவு ஆபத்துகளா? title=

பலரும் நம்மை வெளி உலகத்திற்கு அழகாக காட்டுவதற்கு முதலில் உடைகளை தேர்வு செய்வதை தான் முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர்.  நேர்த்தியான உடைகள் தான் ஒருவரை தோற்றத்தின் மதிப்பை உயர்த்தி காட்டுகிறது என்பது பலரது நம்பிக்கையும் கூட.  ஆள் பாதி ஆடை பாதி என்னும் பழமொழிக்கேற்ப நாம் அணியக்கூடிய ஆடைகள் சமூகத்தில் நமது தரத்தை உயர்த்தி காண்பிக்கும்.  பலருக்கும் உடலோடு நன்கு ஒட்டிய மற்றும் நன்கு பொருத்தமான ஆடைகளை அணிவது பிடிக்கும், சிலருக்கு உடலை இறுக்கி பிடிக்கும் ஆடைகளை அணிவது பிடிக்கும்.  இறுக்கமான ஆடைகளை அணிவது பிடிக்கும் என்றாலும் அது பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தான் அபாயகரமானது.  உதாரணமாக நீங்கள் நீண்ட நேரம் அணியும் மிகவும் இறுக்கமான ஆடைகள் வயிற்றில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும், இது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க | உங்களுக்கும் அடிக்கலாம் ஜாக்பாட்..இந்த '2000' ரூபாய் நோட்டு இருந்தால் போதும்

மிகவும் இறுக்கமான மற்றும் உங்கள் தோலுக்கு அழுத்தும் கொடுக்கும் ஆடைகள் அணிவதால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம் அல்லது நரம்பு சேதத்தை ஏற்படுத்தலாம்.  இதுதவிர மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிவதால் தோல் எரிச்சல், அரிப்பு மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படலாம்.  உங்கள் சருமத்தில் சிவப்புக் குறிகள் அல்லது அழுத்தக் குறிகள் அல்லது சுவாசத்தை கடினமாக்கும் ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.  சௌகரியமான மற்றும் சருமத்தை சுவாசிக்க அனுமதிக்கும் ஆடைகளை அணிவது முக்கியம். இறுக்கமான ஆடைகளால் தோல் எரிச்சல் அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் நீங்கள் தளர்வான ஆடைகள் அல்லது பருத்தி போன்ற இயற்கை இழைகளால் செய்யப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும் என்றும் நைலான் மற்றும் ரெசின் போன்ற செயற்கை துணிகளாலான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.  இப்போது இறுக்கமான ஆடைகளால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பற்றி பார்ப்போம்.

1) மக்கள் இறுக்கமான பேன்ட் அல்லது ஷேப்வேர்களை அணிந்தால் ஈஸ்ட் தொற்று ஏற்படலாம்.  இறுக்கமான ஆடைகள் குறைவான அளவு சுவாசத்தைக் கொண்டிருக்கும்.  எனவே நீங்கள் உங்கள் ஆடைகளில் வியர்வை அல்லது உடற்பயிற்சி செய்யும்போது பயன்படுத்திய ஆடைகள் அல்லது நீச்சலுடைகளை உடனடியாக மாற்றவில்லை என்றால் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

2) இறுக்கமான ஆடைகள் வியர்வை மற்றும் எண்ணெயை தோலில் சிக்கவைத்து, உடலிலுள்ள துளைகளை அடைத்து, முகப்பருக்களை குறிப்பாக மேல் முதுகில் உண்டாக்கும்.

3) இறுக்கமான பெல்ட் பேன்ட்/பாவாடை அணிவது தோல் சிவத்தல், இரத்த ஓட்டத்தை தடுக்கிறது மற்றும் காலப்போக்கில் இடுப்பைச் சுற்றி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி விடுகிறது.  கோர்செட் மற்றும் பிளவுஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை நீங்கள் அணியும் போது இரத்த ஓட்டம் தடைபடுகிறது.

4) இறுக்கமான ஆடைகள் தோலை எரிச்சலடையச் செய்யலாம், குறிப்பாக தோலின் உட்புறம் மற்றும் அக்குள் போன்ற பகுதிகள் ஒன்றாக தேய்க்கும் பகுதிகளில் எரிச்சல் உணர்வு ஏற்படும்.

மேலும் படிக்க | Flirting Day: காதலும் வேண்டாம் ஊடலும் வேணாம் நான் ஊர்சுத்தப் போறேன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News