அடேங்கப்பா! இத்துனூண்டு ஏலக்காய்க்குள்ள இத்தனை நன்மைகளா
Benefits of cardamom: ஏலக்காயை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ள மேற் கொண்டு படியுங்க.
Benefits of cardamom: இன்று உங்களுக்காக ஏலக்காயின் நல்ல பலன்களைக் கொண்டு வந்துள்ளோம். ஏலக்காய் பொதுவாக இனிப்பு தின்பண்டங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏலக்காய் உணவை சுவையாக்குவது மட்டுமல்லாமல், வாய் துர்நாற்றம், இதயம் தொடர்பான பிரச்சனைகள், விக்கல், தோல் தொற்று நோய் போன்றவற்றில் இருந்தும் விடிப்பட உதவுகிறது.
ஏலக்காயில் இருக்கும் தாதுக்கள்
கார்போஹைட்ரேட்டுகள், உணவு நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை முக்கியமாக ஏலக்காயில் (Cardamom) 22உள்ளது, இவை ஆரோக்கியமான உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
ALSO READ: பப்பாளி பழத்தால் பாதிப்பு கூட வருமா? ஆபத்தான எதிர்விளைவுகள் இதோ!!
ஆயுர்வேத நிபுணர்கள் கூறுவது என்ன?
நாட்டின் புகழ்பெற்ற (Cancer) ஆயுர்வேத நிபுணர் டாக்டர் அப்ரார் முல்தானியின் கூற்றுப்படி, ஏலக்காயின் ஆக்ஸிஜனேற்ற உறுப்பு இரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது, இது மனநிலை மாற்றத்திலும் நிவாரணம் அளிக்கிறது. ஏலக்காயில் இரண்டு வகை உண்டு. சிறிய மற்றும் பெரிய வகை ஆகும். சிறிய ஏலக்காய் வாய் துர்நாற்றத்தை நீக்கவும், இனிப்புகள் தயாரிக்கவும், உணவுகளின் நறுமணத்தை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் பெரிய ஏலக்காயின் முக்கிய பயன்பாடு மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஏலக்காயை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of consuming cardamom)
* ஏலக்காய் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
* ஏலக்காயை சாப்பிடுவதால் உடலில் ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படுவதில்லை. இதன் காரணமாக, ஆஸ்துமா அல்லது மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏலக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
* ஏலக்காய் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதிலுள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
* இயற்கையாகவே ஏலக்காய் புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது. விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வின் படி ஏலக்காய் புற்று நோய் வராமல் தடுக்கவும், தள்ளிப் போடவும், புற்று நோய் உருவாகாமல் தடுக்கவும் செய்கிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு ஏலக்காய் சாப்பிட வேண்டும்?
ஏலக்காயை ஒரு நாளைக்கு 2-3 முறை உட்கொள்வது நன்மை பயக்கும்.
ஏலக்காய் சாப்பிட சரியான நேரம்
இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் 2 ஏலக்காயை சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும்.
(குறிப்பு: எந்தவொரு தீர்வையும் எடுப்பதற்கு முன்பு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது மருத்துவரை அணுகவும். இந்த தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.)
ALSO READ: தர்பூசணி ஜூஸ்: அள்ள அள்ள குறையாத நன்மைகள் இருக்கும் கோடைகால நண்பன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR